India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான ரமேஷ் மொகந்தி என்ற தொழிலாளி திருப்பூர் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் 25 நாட்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். திடீரென தற்கொலை செய்து கொண்ட அவருக்கு திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கம் முறைப்படி புகார் அளித்து ஆவணங்கள் பெற்று நல்லடக்கம் செய்து பெற்றோர்களுக்கு நிவாரணம் பெற்று வழி அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர். விவசாயம் தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகள் என 135 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வழங்கியுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் கேரளாவில் உள்ள வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்துள்ளார்.
அங்கு அடகு வைக்கும் நகைகளை போலியாக தயார் செய்து திருப்பூரில் உள்ள நண்பரின் மூலமாக திருப்பூர் வங்கியில் அடைமானம் வைத்துள்ளார். இந்த மோசடி குறித்து கேரள மாநில போலீசார் இன்று இருவரையும் கைது செய்து, திருப்பூரில் உள்ள வங்கிக் கிளையிலிருந்து 496 பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை ஈடுபட்டனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறை சென்று ஆய்வு செய்தனர்.

பயணிகளின் வசதிக்காக பெங்களூரு முதல் கொச்சி வேலி திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 2 மணி 2:15 மணிக்கு கொச்சு வேலி சென்றடையும் என தெற்கு ரயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் குடிசைகளுக்குப் பதிலாக பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்டத்தில் 3,551 பயனாளிகளுக்கு ரூ.74.66 கோடியில் கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நேற்று அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, திருப்பூரில் கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் நேற்று அவரது ரசிகர்கள், கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பல இடங்களில் கட்சி கொடியேற்றினர். தவெக மத்திய மாவட்ட தலைவர் பாலமுருகன் பேசுகையில், திருப்பூரில் கட்சிக்கொடி இல்லாத இடமே இல்லை என்ற நிலையை உருவாக்க உள்ளோம் என்றார்.

திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், போலீஸ் கமிஷனர் லட்சுமி, மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் துணை மேயர் பாலசுப்ரமணியம், துணை கமிஷனர்கள் சுஜாதா, யாதவ் அசோக் கிரிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

➤உடுமலை அருகே மர்மவிலங்கு நடமாட்டம்
➤உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
➤திருப்பூரில் வக்கீல்கள் நாளை புறக்கணிப்பு போராட்டம்
➤எரகாம்பட்டி மாரியம்மன் கோவில் ஆண்டு விழா
➤திருப்பூரைச் சேர்ந்தவர் வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி
➤பல்லடம் அருகே கிராவல் மண் கடத்த முயன்ற லாரிகள் சிறை பிடிப்பு
➤நத்தக்காடையூரில் குடிநீர் திட்ட பணி – அதிகாரிகள் ஆய்வு

பல்லடம் அருகே பொன் நகர் பகுதியில் வண்டல் மண் அள்ளுவதாக கூறி கிராவல் மண் கடத்த முயன்றதாக இன்று இரண்டு லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் வட்டாட்சியா் ஜீவானந்தம் மற்றும் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.