India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் வருவாய் அலுவலர்களுக்கான பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் வருவாய் அலுவலர்களுக்கான பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியில் தொழில் பிரச்சனை காரணமாக குடும்பத்துடன் வீட்டைச் சென்ற மகனையும், அவரது குடும்பத்தாரையும் கண்டுபிடித்து தர வலியுறுத்தி மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காணாமல் போனவர்கள் வெளி மாநிலத்தில் இருப்பதை கண்டறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் மீட்டு குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர். இதில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை கமிஷனர் லட்சுமி பாராட்டினார்.

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால் அமைக்கும் பணி மற்றும் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் 1 பகுதியாக திருப்பூர்-காங்கேயம் சாலையில் தனியார் பள்ளி முன்பு இருந்து விஜயாபுரம் பகுதி வரை ரூ.65 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

➤திருப்பூரில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சண்முக பாண்டியராஜன், சத்தி ஆகிய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு. ➤மாடி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் வேளாண் வட்டார மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிறுஸ்துராஜ் தெரிவித்துள்ளார். ➤காங்கேயத்தில் துப்பாக்கி சுடும் போட்டியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். ➤முதல்வர் கோப்பைக்கான விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு.

திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அறை எண் 120-ல் நடைபெறுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில்
மாடி தோட்டம் அமைக்க விரும்புவர்களுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் விதை தொகுப்புகள் வழங்கபடுகிறது. இதன் மூலம் நமக்கு வேண்டிய காய்கறிகள் இயற்கை விவசாயம் மூலம் நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம், தேவைப்படும் விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள வேளாண் வட்டார மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் டிஎஸ்பி ஆக இருந்தவர் கலையரசன். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தாராபுரம் டிஎஸ்பியாக கோவை பகுதியில் டிஎஸ்பி ஆக இருந்த சுரேஷ்குமார் நேற்று தாராபுரம் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மிமீ ஆகும். இந்த ஆண்டு அதிகம் பெய்துள்ளது. பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது. நெல் 65.60 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 16.23 மெட்ரிக் டன், நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் தேவையான அளவு இருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் கோல்டன் நகர் கரு நாகபுரி விநாயகர் கோவில் அருகில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சதீஷ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் சண்முக பாண்டியராஜன், சக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.