India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூரில் பனியன் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிப்பால் தொழிலாளர்கள் தேவை அதிகரித்துள்ளது. இங்கு தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்று வருகின்றனர். தற்போது வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களின் வருகை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை தேடி திருப்பூரில் குவிந்து வருகின்றனர்.

திருப்பூர்: மூலனூரை அடுத்த முளையாம்பூண்டி மேட்டுப்புதூர் பகுதியில் உள்ள வேப்பமரத்தில் சிலர் ஒரு நாயை தூக்கில் தொங்கவிட்டு கொன்றதும், மற்றோரு நாயை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. இதுகுறித்து பிராணிகள் வதை தடுப்பு சங்க அமைப்பினர் மூலனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்களுடன் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயராமன் ஆர்டிஓக்கள் செந்தில் அரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கேயம் அடுத்த வட்டமலை அனுகிரகா ஸ்பின்னிங் மில் அருகே, கஞ்சா விற்பதாக தாராபுரம் மது விலக்கு போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சந்து மகாஜன் (27) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், முதலிபாளையம் சிட்கோவில் இன்று கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். இதில், திமுக மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாதன் கலந்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா அவிநாசி நகர தேமுதிக சார்பில் கொண்டாடப்பட்டது. மேலும் அவரது திருஉருவ படத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பிரசாத்குமார் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இனிப்புகள் வழங்கி நிர்வாகிகள் கொண்டாடினர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாளம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி குமரானந்தாபுரம் பகுதியில் உள்ள விநாயகர் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமை தாங்கி பேசினார். மேலும் புதியதாக கட்சியில் இணைந்த நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.

திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று குளத்துப்பாளையம் பகுதிகளில் சுமார் 30 இடங்களில் கொடியேற்று விழாவும், அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமும் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

நீட் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மருத்துவ கவுன்சிலிங் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்த 31 பேர் பங்கேற்றனர். இதில் 21 பேர் எம்பிபிஎஸ் படிக்கவும், ஆறு பேர் பல் மருத்துவம் படிக்கவும் கல்லூரிகளை நேற்று தேர்வு செய்தனர்.

நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த சுபாஸ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சுபாஷ் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்ததால் அவரை போலீஸ் கமிஷனர் லட்சுமி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.