India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் திருப்பூர் கலெக்டர் கிறிஸ்தவராஜ் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளில் 3 மாதத்தில் சுமார் 385 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று திருப்பூர் ஊராட்சி ஒன்றிய உட்பட்ட பட்டம் பாளையம், சொக்கனூர், தெரம்பலூர் ஆகிய ஊராட்சிகளுக்கு தெரவலூர் ஸ்ரீஅண்ணமார் சாமி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடக்கிறது. இதே போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தாலுகா பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ரயில் பயணிகள் வசதியாக சென்னை சென்ட்ரில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரல்-கொச்சுவேலி சிறப்பு ரயில் இன்று 28ஆம் தேதி முதல் செப்-25ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் மாலை 3.45 புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். திருப்பூருக்கு இரவு 10.13-க்கு வந்தடையும். இந்த ரயிலை திருப்பூர் ரயில் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

திருப்பூரில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் இன்று மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடுமலையில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, பரம்பிக்குளம், சொமந்துறைச்சித்தூர், அலியார், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய இடங்கள். அதேபோல, பல்லடத்தில், கோத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய், தண்ணீர்பந்தல் ஆகிய இடங்கள் ஆகும்.

திருப்பூர் காலேஜ் ரோடு துவாரகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா (80). இவர் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் செல்வதற்காக இன்று கல்லூரி சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடந்துள்ளார். அப்போது எதிரே வந்த ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடுமலையில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சொமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய இடங்கள். அதேபோல, பல்லடத்தில் கோத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய், தண்ணீர்பந்தல், செம்மண்டபாளையம், ஜகத்குரு, தங்கமேடு, செங்காலிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றின் கரையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். மடத்துக்குளம் போலீசார் விசாரணையில் அவர் கொழுமம் பகுதியைச் சேர்ந்த சாரதா என்பது தெரிய வந்தது. இந்நிலையில் கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தொடர்ந்து இன்று உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக #IMD அறிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தின் காரணமாக கடந்த சில மாதங்களில் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் நிர்வாக நலன் கருதி, தாசில்தார் நிலையில் அதிகாரிகள் நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மடத்துக்குளம் தாசில்தாராக இருந்த செல்வி காங்கயம் அதிதிராவிடர் நல (நிலம் எடுப்பு) தனிதாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தார் தங்கவேல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், தமிழ்நாடு மாநில வாணிப கழக உதவி மேலாளராக சரவணன் ஊத்துகுளிக்கும் மாற்றம் செய்யபட்டனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான, ராஜா ராஜ ராவ் வீதியில் அமைந்துள்ள, முரசொலி மாறன் வளாகத்தில், கருவம்பாளையம் பகுதி கழக திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி நாகராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.