Tiruppur

News August 30, 2024

திருப்பூரில் 3692 பேருக்கு வெறிநாய் கடி சிகிச்சை

image

திருப்பூர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் துரத்திச் சென்று தெரு நாய்கள் கடித்து வருகின்றன. ஒரு சில வாகன விபத்துகளும் தெருநாய்களால் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த மே மாத முதல் ஜூலை மாதம் வரை திருப்பூர் அரசு மருத்துவமணையில் 3692 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

திருப்பூர் திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நாளை முதல் மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக செய்தித்துறை மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், உடுமலை தொகுதி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.

News August 30, 2024

திருப்பூர்: விபத்தில் இறந்த காவலருக்கு நிதி உதவி

image

ஊத்துக்குளியில் வசித்து வந்தவர் அருள்குமார். இவர் பெருமாநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் விபத்தில் உயிரிழந்தார். இவ கடந்த 2009ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த காவல்துறை சார்ந்த நண்பர்கள் ஒருங்கிணைந்து விபத்தில் இறந்து போன அருள்குமாரின் குடும்பத்தினருக்கு  ரூ.23,85,000 நிதி அளித்துள்ளனர். மக்களே உங்கள் கருத்து என்ன?

News August 30, 2024

திருப்பூரில் 85 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

image

திருப்பூரில் சட்டவிரோதமாக மது தயாரிப்பவர்கள், வன்முறையாளர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சட்டவிரோத பொருள்கள் என பல்வேறு வழக்குகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செய்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 85 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

News August 29, 2024

விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்த அமைச்சர்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை (ம) அறிவியல் கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. பள்ளி விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் இன்று காலை துவக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

News August 29, 2024

இந்திய ராணுவ கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு

image

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2025ல், 8ம் வகுப்பு சேருவதற்கான நுழைவுத் தேர்வு வருகிறது டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறுகின்றது. www.rimc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு செப்.30-க்குள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பார்க் டவுன் சென்னை 600003 முகவரிக்கு அனுப்ப வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News August 29, 2024

முதல்வர் கோப்பைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் முன்பதிவு செய்திட கால அவகாசம் வருகிற 2 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாக உள்ளவர்கள்
https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். மேலும் தகவல்களுக்கு 95140 00777 தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

புதிய இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்க கூடாது

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், திராவிட விடுதலைக் கழகத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: வருகிற 7 ம் தேதி 12 ம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி விநாயகர் சிலைகள் பல பகுதிகளில் வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வைக்கப்பட்ட இடத்தைத் தவிர புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

News August 28, 2024

அவிநாசியில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம் 

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை(29.8.24) அவிநாசி செம்பியநல்லூர் செந்தூர் மஹாலில் செம்பியநல்லூர், வேலாயுதம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும், பல்லடம் செம்மிபாளையம் கே.என்.புரம் விக்னேஷ் மஹாலில் சுக்கம்பாளையம், கே.அய்யம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு, தாராபுரம் கரையூர் ஸ்ரீ சக்தி முருகன் மண்டபத்தில் மனக்கடவு பகுதிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

குரூப் 2 தேர்வுக்கான மாதிரி தேர்வு

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் குரூப் 2 தேர்வுக்கு 123 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தினமும் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி தேர்வு நடைபெற்றது.

error: Content is protected !!