India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், போக்குவரத்து நகரை சேர்ந்தவர் மதிவானன் (28). ஐடி ஊழியர். இவர் இன்று இரவு தாராபுரத்திற்கு காரில் மனைவி ராகவர்த்தினி (26), தாய் பாக்யலட்சுமி (55) மற்றும் மகனுடன் சென்றுள்ளார். அப்போது நொச்சிபாளையம் அருகே புளியரத்தில் கார் மோதியதில் பாக்யலட்சுமி மற்றும் ராகவர்த்தினி ஆகியோர் உயிரிழந்தனர். மதிவாணன் மற்றும் குழந்தை சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

திருப்பூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு விளையாட்டுத்துறையில் குறிப்பிட்ட வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் நாளை முதல் இணையதளம் வாயிலாக செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் புகையிலை பொருள்களை தடுக்கும் வகையில் திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அபராதமும் விதித்து வருகின்றனர். இந்த வகையில் 2 ஆயிரத்து 893 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கின; மாவட்டத்தில் 347 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.99¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வாழ்வாதாரம் ஏற்படுத்திட வேண்டும் நோக்கில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தாட்கோ சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் 723 பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அவர் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி வேலை நாளில், விற்பனை விவரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரங்கள் சரிபார்ப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) சனிக்கிழமை பணி நாளன்று அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முழுமையாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் வருகிற 4 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை 51 வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 70 அரங்குகளில் நவீன காலத்திற்கு ஏற்ற வகையிலான ஆடைகள் ,ஆடை தயாரிப்பு சார்ந்த தொழில் நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. திருப்பூர் தொழில் துறையினர் கலந்துகொள்ள ஐ.கே.எப். நிறுவனர் சக்திவேல் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து உள்ளது. திருப்பூர் டு மானசி பாளையம் செல்லும் பேருந்து 52 என் உள்ள டவுன் பஸ் பயணிகள் ஏறும் படிக்கட்டு உடைந்து ஆபத்தான நிலையில் பேருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசு போக்குவரத்து கழகம் விபத்துகள் ஏற்படும் முன்னே மாற்றி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தாராபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கரையூர் ஸ்ரீ சக்தி முருகன் திருமண மண்டபத்தில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான எஸ்.வி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் 1050 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில், 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். இதில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.