India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் புற காவல் நிலையங்களில் மாலை மற்றும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் முதல் டிஎஸ்பி வரையிலான அலுவலர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார். குற்ற சம்பவங்களை தடுத்திடவும் பொது மக்களுக்கான பாதுகாப்பை அதிகரித்திடவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவ ஆட்சி தலைமையில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் 549 மனுக்களை அளித்துள்ளனர்.

திருப்பூர் மாநகர காவல் துறையில் அதிவிரைவு காவல் படையினர் பாதுகாப்பு பணி, விசேஷ காலங்களில் கூடுதல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட சீருடை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ராணுவ வீரர்கள் போன்ற மிடுக்கான சீருடை அதிவிரைவு படை போலீஸ் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவராக திருப்பூர் டிமான்டி முதல் வீதியைச் சேர்ந்த சையத் மன்சூர் உசேனை கட்சி நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார். கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட சையது மன்சூர் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இம்மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்பதிவு ஆக.17ல் துவங்கி, கூடுதல் அவகாசத்துடன் இன்று (செப்.2) வரை வழங்கப்பட்டது.திருப்பூரைச் சேர்ந்தவர்கள் இன்று மாலைக்குள் https://www.sdat.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் அருகே உள்ள கருப்பன் வலசு கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தோட்டத்தில் உள்ள ஆடுகள் பட்டியில் வெறிநாய்கள் புகுந்து 30 ஆடுகளை கடித்துக் குதறியது. வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 12 ஆடுகள் மற்றும் 18 குட்டிகள் பரிதாபமாக இன்று உயிரிழந்தது. இதனால் விவசாயி பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 3.50 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், தமிழக அரசு சார்பில் மாநில நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. இந்த விருது சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் மாநில அரசால் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இந்த விருது பெற 48 ஆசிரியர்களின் பெயர்கள் மாவட்ட கல்வித்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நேற்று சரக்கு வாகனம் கவிழ்ந்து 19 பேர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் 6 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சின்ன பொம்மன் சாலையைச் சேர்ந்த வள்ளியம்மாள்(58) என்ற பெண்மணி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூரின் பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்களின் 90% சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களாக உள்ளன. மாநில மற்றும் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான திட்டங்களை தொழில் துறையினர் பயன்படுத்த துவங்கியுள்ளதால், ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை நோக்கி திருப்பூர் பயணம் வேகம் பெற்றுள்ளது.

திருப்பூரில் 51ஆவது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி வரும் 4ஆம் தேதி துவங்கி 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது என பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தென்மண்டலத் தலைவர் சத்திவேல் கூறியுள்ளார். இதில், திருப்பூரைச் சேர்ந்த முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பங்கேற்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.