Tiruppur

News September 7, 2024

தாராபுரத்தில் பயனற்று கிடக்கும் குடியிருப்புகள்

image

தாராபுரம் பொள்ளாச்சி ரோடு தனியார் கல்லூரி அருகே ஈரோடு வீட்டு வசதி வாரியம் சார்பில் தாராபுரம் மனை மேம்பட்டு திட்டத்தின் கீழ் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்பும் பயனர்களிடம் முறையாக ஒப்படைக்காவிட்டால் இருந்து வருகிறது. இதனால் பாழடைந்து கிடக்கும் இந்த வீடுகளில் இரவு நேரங்களில் நடைபெறும் சமூக விரோத செயல்கள் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

News September 7, 2024

இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முற்றுகை

image

திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கனுத்து கிராமத்தில் ஊருக்கு நடுவில் சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் நேற்று வந்தபோது விவசாயிகள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் கிளம்பிச் சென்றனர்.

News September 6, 2024

திருப்பூரில் பூக்கள் விலை உயர்வு

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு. மல்லி கிலோ 720 ரூபாய், முல்லை 480 ரூபாய், ஜாதி மல்லி 480 ரூபாய், அரளி 150 ரூபாய், செவ்வந்தி 160 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை, சம்பங்கி 280 ரூபாய், பெங்களூர் கலர் ரோஸ் வகைகள் 320 ரூபாய், தாமரைப்பூ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கபடுகிறது. இருப்பினும் வியாபாரம் எதிர்பார்த்த அளவு இல்லை என வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.

News September 6, 2024

மாநில கால்பந்து போட்டிக்கு உடுமலை மாணவி தகுதி

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதம்பட்டியில் உள்ள என் வி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மிருதுளா கோவையில் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில் நடைபெற்ற மண்டல அளவிலான 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்ற நிலையில் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News September 6, 2024

செல்லப்பபுரம் பள்ளியில் கமிஷனர் ஆய்வு

image

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அரசு பள்ளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி பராமரிப்பு மற்றும் கழிவறைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக செல்லப்பபுரம் மாநகராட்சி அரசு பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவறை கட்டுமான பணிகளை மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

News September 6, 2024

திருப்பூர் பறவைகள் சரணாலயத்தில் ஆட்சியர் ஆய்வு

image

திருப்பூர் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் 125 ஹெக்டர் பரப்பளவில் நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. அங்கே மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுடன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.

News September 6, 2024

திருப்பூரில் 2500 போலீசார் பாதுகாப்பு

image

திருப்பூர் மாவட்டம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை, பல்லடம், தாராபுரம் உட்பட மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் 2500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 7 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

News September 5, 2024

திருப்பூரில் போலீசார் கொடி அணிவகுப்பு

image

விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற ஏழாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திருப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி இருக்கலாம் என்பதை தெரியப்படுத்தும் வகையில் மாநகர போலீசாரின் கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு ரயில் நிலையம் முதல் ஆலங்காடு வரை நடைபெற்றது.

News September 5, 2024

உடுமலையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நாளை 6ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் அரசு கல்லூரியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வழங்கி தீர்வு காணலாம் என கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

News September 5, 2024

திருப்பூரில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம்

image

திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று (04.09.2024) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சாலைப்பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!