Tiruppur

News April 12, 2024

திருப்பூரில் ட்ரோன்கள் பறக்க தடை

image

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வேலூர் கிராமத்தில் நாளை(ஏப்ரல்.13) திருப்பூர் மற்றும் நீலகிரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ள பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி நாளைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News April 12, 2024

திருப்பூரில் தபால் வாக்குப்பதிவு

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று ஆலங்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய முதல்நிலை காவலர்கள் முதல் கடைநிலை காவலர்கள் வரை ஏராளமானவர்கள் இன்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

News April 12, 2024

பெண்கள் பள்ளி அருகே மதுபான கூடம் திறக்க எதிர்ப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி சவுக் நேரு வீதியில்
அரசு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் பள்ளியில் 1500-க்கு மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில் பள்ளி அருகில் தேவாலயம், கல்லறை தோட்டம், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்தப் பகுதியில் தனியார் மதுபான கூடம் அமைக்க முயற்சிகள் நடந்த வருகின்றன. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

News April 11, 2024

திருப்பூர்: வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வக்கீல்கள் சங்கம், திருப்பூர் பார் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன் ஆகிய 3 சங்கங்களை சேர்ந்த வக்கீல்கள் கடந்த 8ஆம் தேதி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று 2வது நாளாக 3 சங்கத்தினரும் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள். இதில் 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

News April 10, 2024

திருப்பூரில் நடிகை நமீதா பரப்புரை

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பாஜகவை சேர்ந்தவரும் நடிகையுமான நமிதா திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இன்று தொழிலாளர்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News April 10, 2024

திருப்பூர் அருகே திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரபட்டி ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினர் சாரதா மணி தலைமையில் 80 பேரும், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் உமா மகேஸ்வரி ஏற்பாட்டில் 20க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். உடன் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 10, 2024

திருப்பூர் அருகே அதிமுகவுக்கு ஆதரவு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல் இன்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்களை இன்று நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அதிமுக வேட்பாளருக்கு பரப்புரையில் ஈடுபட போவதாக அறிவித்தார். உடன் நகரத் தலைவர் ஈஸ்வரன், செல்வராஜ், சுந்தரலிங்க சுவாமிகள் ஆகியோர் இருந்தனர்.

News April 10, 2024

திருப்பூரில் ரம்ஜான் பண்டிகை: சிறப்பு தொழுகை

image

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாத நடைபெற்று வருவதை முன்னிட்டு நேற்று இரவு பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் பண்டிகை என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மைதானத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

News April 10, 2024

திருப்பூரில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி இன்று துவங்கியது. ராயபுரத்தில் நடைபெற்று வரும் இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News April 10, 2024

நாளை ரம்ஜான்: பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரம்ஜான் பிறை தென்பட்டதால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு இறைச்சி மஸ்தான் நகர் பகுதியில் உள்ளீர் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற உள்ளது. இதற்காக பல் இந்த பள்ளிவாசலில் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!