Tiruppur

News April 18, 2024

செங்காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா

image

உடுமலை, பள்ளபாளையம் கிராமத்தில் செங்காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 9-ம் தேதி கணபதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது அதை தொடர்ந்து 10ஆம் தேதி வாஸ்து சாந்தி கிராம சாந்தி நடைபெற்றது 11ஆம் தேதி கம்பம் போடுதல் மற்றும் உருமால் கட்டு சீறும் ,
12 ஆம் தேதி சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிலையில் செங்காட்டம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

News April 17, 2024

மூலனூர் பேரூராட்சி 11 வார்டில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் இன்று இறுதிக்கட்டமாக உதயசூரியன் சின்னத்திற்கு ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களை ஆதரித்து தீவிரமாக இன்று வாக்கு சேகரித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

News April 17, 2024

திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியினர் வாகன பேரணி

image

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடையுள்ள நிலையில் இறுதி கட்ட பரப்புரையாக திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி திருப்பூர் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

News April 17, 2024

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

image

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இறுதி கட்ட பரப்புரை இன்று நடைபெற்று வரக்கூடிய நிலையில் ,கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டப்பேரவை தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் இன்று இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.

News April 17, 2024

3 நாள் விடுமுறை: குவிந்த மதுப்பிரியர்கள்

image

நாடாளுமன்ற தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவின்போது அசம்பாவிதங்கள், பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க இன்று முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. வாக்குப்பதிவு நடைபெறும் முன்பு சிறிய சச்சரவுகளை தடுக்க டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.

News April 16, 2024

வாக்களித்தார் திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உட்பட தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பணியில் ஈடுபடக்கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் தனது தபால் வாக்கினை பதிவு செய்தார்.

News April 15, 2024

’12 வகை ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்’

image

மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வாக்காளர் புகைப்படம் அட்டை இல்லாதவர்கள் 12 வகையான மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.

News April 14, 2024

ஆட்சியர் நேரில் ஆய்வு

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் எல்.ஆர்.ஜி மகளிர் கலை கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஜூன் 4-ஆம் தேதி அங்கேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News April 13, 2024

ஆட்டுக்குட்டியுடன் வாக்கு சேகரித்த பாஜகவினர்

image

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதி வீரபாண்டி பகுதியில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆடு, மாடு, பால் கேன்களுடன் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News April 12, 2024

திருப்பூரில் ட்ரோன்கள் பறக்க தடை

image

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வேலூர் கிராமத்தில் நாளை(ஏப்ரல்.13) திருப்பூர் மற்றும் நீலகிரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ள பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி நாளைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!