India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வருகின்ற 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மிலாது நபி விழா கொண்டாடப்பட உள்ளது. நபிகள் நாயகம் பிறந்த தினமாக கொண்டாடப்படக்கூடிய அன்னாளில் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரக்கூடிய மதுபான கடைகள் , அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், மனமகிள் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் மதுபான கூடங்களை அடைக்க மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

➤ காங்கேயத்தில் விவசாய கிணற்றில் விழுந்ததில் மொத்தமாக 16 ஆடுகள் உயிரிழந்தது. ➤ பல்லடத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபரின் விரலை உடைத்து விட்டதாக மனித உரிமை கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளனர். ➤ பல்லடம் அருகே பூமலூரில் காளை மாடு முட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ➤ ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து மல்லிகை பூ ரூ.500-ல் இருந்து ரூ.2,000 விற்பனை.

திருப்பூர், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுகள் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 584 பேர் தேர்வு எழுதுவதற்கு தயாராக இருந்தனர். இந்நிலையில் சுமார் 2607 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். 977 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி முதல் முதலமைச்சர் கோப்பைக்கான மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அனைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் கிரிஷ் யாதவ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புரு செல் லியோஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சலும் கருச்சிதைவும் ஏற்படுகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசி பதினெட்டாம் தேதி வரை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 433 பேர் குரூப் 2 தேர்வை இன்று எழுத உள்ளார்கள். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, தாராபுரம் ஆகிய 3 தாலுகா பகுதிகளில் 53 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜெய்வாபாய் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். அப்போது தேர்வு மையத்தில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் அருள் பிரசாத். இவர் பனியன் தொழிலாளி. இவருக்கும் அருகில் வசிக்கும் முத்தம்மாள் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக அருண் பிரசாத்திடம் விசாரிக்க பல்லடம் போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது அருண் பிரசாத்தை போலீசார் தாக்கியதில் சுண்டுவிரல் உடைந்து விட்டதாக மனித உரிமை கவுன்சிலிடம் நேற்று புகார் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20 ஆம் தேதி
காலை 10 மணி மதியம் 2 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அந்தியூர் கிராமத்தில் கம்பு செயல் விளக்கத்துடன் அறுவடை விழா இன்று நடைபெற்றது பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கொண்டார். அப்போது சோளம் கம்பு ராகி திணை வரகு குதிரைவாலி போன்ற ஊட்டச்சத்து மிக்க தானியங்களை அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான விதை உற்பத்தி மற்றும் மானியம் நுண்ணூட்டசத்து உயிர் உரங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிக்கையில் குரூப் 2 பதவிக்கு 507 பணியிடங்களும், குரூப் 2 ஏ பணிக்கு 1820 பணியிடங்களும் என மொத்தம் 2327 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 433 பேர் குரூப் 2 தேர்வை எழுத உள்ளார்கள்.
Sorry, no posts matched your criteria.