Tiruppur

News March 27, 2024

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

image

திருப்பூரில் மக்களவைத் தேர்தல் தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்டத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

News March 27, 2024

திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் சொத்து மதிப்பு

image

திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுப்பராயன் மனுவில், கையிருப்பு மற்றும் வங்கியிருப்பு ரொக்கமாக 79 ஆயிரத்து 647 ரூபாய்; மனைவி கையிருப்பாக இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 584 ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். மனைவி பெயரில் மட்டும், அசையும் சொத்தாக 5.17 லட்சம் ரூபாய்; அசையா சொத்தாக, 95.55 லட்சம் ரூபாய்க்கும், 1.50 லட்சம் அளவுக்கு நகைக்கடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

image

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 27, 2024

தமாகா மாவட்ட தலைவருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமாக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேலை பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, உடுமலை நகர செயலாளர் கண்ணாயிரம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரப்பட்டது.

News March 26, 2024

எம்.பி செய்த பணிகளை பட்டியலிட்டால் பரிசு

image

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், “இவர் திருப்பூர் தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால் ரூ.1கோடி பரிசு வழங்கப்படும்” என்ற போஸ்டர் மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு சார்பில் தொகுதியின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 26, 2024

வலிமையான வேட்பாளர்: அண்ணாமலை பேச்சு

image

கோவை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இதற்கு முன் இருந்த எம்பி யாரும் பார்த்ததில்லை. கோவை தொகுதியில் உரிமைகளை கேட்டு பெற வலிமையான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என பேசினார்.

News March 26, 2024

திருப்பூரில் பிஎஸ்என்எல் சார்பில் மெகா மேளா

image

பிஎஸ்என்எல் சார்பில் திருப்பூரில் புதன்கிழமை (மார்ச் 27) மெகா மேளா நடைபெறுகிறது. மேலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு பிஎஸ்என்எல் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையத்தில் புதன்கிழமை மெகா மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்ட உள்ளன.

News March 26, 2024

திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

image

திருப்பூர் ரயில் நிலையத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் ரயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடைமைகளைத் தீவிரமாகச் சோதனை செய்யும் போலீசார் பணம், பரிசுப் பொருள்களை எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

News March 25, 2024

உடுமலையை சேர்ந்தவர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ச.எல்சி என்பவர் சுயேட்சையாக இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் ஏற்கனவே உடுமலை சட்டமன்ற தொகுதிக்கும், 1996 , 2001, 2006 ஆண்டுகளில் உடுமலை நகர மன்ற தலைவருக்கும் போட்டியிட்டுள்ளார். மேலும், இவர் மக்கள் நீதி மய்யம் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் குரு என்பவரின் தாயார் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2024

தாராபுரம் அருகே சாலை விபத்தில் இரண்டு பேர் பலி

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சின்னக்கம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் இன்று சாலை விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த பயணிகள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மற்றொரு பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!