India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர், காங்கேயம் சுற்று பகுதிகளில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழக்கும் சம்பவத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், மக்கள் பணி செய்ய தவறியதால் தார்மீக பொறுப்பேற்று கலெக்டர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பதவி விலக கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ஆகியோர் இன்று மண்டலம்-1, வார்டு-21, சாந்தி தியேட்டர் அருகில் உள்ள மயானப் பகுதியில் மயான புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஸ்ரீ ஜீவாதாரம் சேவை டிரஸ்ட் காண்டவ வனம் சார்பில் மரங்கள் நடும் விழாவினை துவக்கி வைத்தார்கள். உடன் துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20ம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள கலெக்டர் வளாகம், 4-வது தளத்தில் அறை எண் 439ல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இதில் வேலை தேடுகிறவர்கள் கலந்து கொண்டு பயன் பெற கலெக்டர் கிறிஸ்துராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சாலக்கடை அருகே தும்பச்சிபாளையம் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தலைக்குப் பிறகு விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் லேசான படுகாயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அரசு விடுமுறை நாட்கள் ஆன இன்று மிலாடி நபி நோன்பு முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அரசு மதுபான கடை விடுமுறை அறிவிப்பு தெரிவித்தது. இந்நிலையில் நேற்று குமரன் மஹால் சாலை மூலனூர் அலங்கியம் ரவுண்டானம் போன்ற பகுதிகளில் அரசு தடை விடுத்துள்ள மதுபாட்டில்கள் சமூக விற்பனை இதை அறிந்த காவல்துறையினர் அதிரடியாக விற்பனை செய்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து & கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற கிராம ஊராட்சி மையங்களில் மின்கலம் மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும், கண்ணாடி இழைகளை துண்டாக்கும், மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடைசெய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் – திருப்பூர் சாலையில் உள்ளது நீலக்காட்டுபுதூர். இதில் நேற்று மாலை சிவன்மலையில் இருந்து மொபட்டில் 2 பேர் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்தவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காயம் பட்டவர்கள் குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் முற்போக்காளர் கூட்டமைப்பு சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது தமிழகத்தில் பேசுபொருளாக மாறியுள்ள கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட புகைப்படம் இடம் பெற்று இருக்கிறது. இப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மிலாது நபியை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூட வேண்டுமென கலெக்டர் அறிவித்துள்ளார். இந்நிலையில் உடுமலை நகராட்சி பசுபதி வீதி அர்பன் வங்கி அருகில் அரசு மதுபான கடை அருகில் ஜன்னல் ஓரம் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வில்லை பொதுமக்கள் தெரிவித்தனர்.

திருப்பூரில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் ஆதரவற்றோர் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு http://www.tnwidowwelfarebord.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனால், ஓய்வூதியம், சுயதொழில் செய்ய மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளின் கீழ் பயன்பெறலாம்.
Sorry, no posts matched your criteria.