Tiruppur

News September 23, 2024

“மக்களே அச்சமடைய வேண்டாம்”

image

திருப்பூர், தாராபுரம் பைபாஸ் சாலையில் இன்று இரண்டாவது நாளாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் வன சரக அலுவலர் மௌனிகா தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினர் ஆய்வு செய்தபோது சிறுத்தை வந்ததற்கான எந்தவிதமான தடயங்களும் இல்லாததால், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

News September 23, 2024

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மனுக்கள்

image

திருப்பூர் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டமானது இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை சார்பாக 516 மனுக்களை அளித்துள்ளனர்.

News September 23, 2024

திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம்

image

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News September 23, 2024

தாராபுரத்தில் சிறுத்தை நடமாட்டம்: பீதியில் மக்கள்

image

தாராபுரம்- ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் தனியார்க்கு சொந்தமான கேஸ் பங்க் உள்ளது. இந்த கேஸ் பங்கின் அருகே சிறுத்தை ஒன்று இருப்பதை தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (40) என்பவர் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் காங்கேயம் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News September 22, 2024

திருப்பூர்: திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

image

வெள்ளகோவில் அடுத்த எல்.கே.சி நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருக்கு சொந்தமான ஸ்டுடியோவில் நேற்று முன் தினம் 2 கேமிராக்கள் திருடு போனது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்கரன் (22), சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த முகமது யூனிஸ் (22) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர்.

News September 22, 2024

திருப்பூரில் 3 பேருக்கு ‘குண்டாஸ்’

image

திருப்பூர்: பெருமாநல்லுார் அருகே கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவர் தனது தோழியின் போட்டோவை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். இவருக்கு தெரியாமல், நண்பர்கள் போட்டோவை பகிர்ந்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டினர். இந்த பிரச்சனையில் புவனேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை குண்டாசில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

News September 21, 2024

திருப்பூர்: காதல் விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது

image

திருப்பூர்: தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சேதுபதி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண்ணின் உறவினர் பூபதி ராஜா என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சேதுபதி, தனது நண்பர்களுடன் அவரை தாக்கியுள்ளார். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

News September 21, 2024

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் ஆட்சியர் அலுவலக கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார். உடுமலை பகுதி விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கவும் பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 20, 2024

திருப்பூர்: காதல் விவகாரத்தில் 4 பேர் கைது

image

திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள புதுக்கோட்டை மேடு பகுதியில் சேதுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சேதுபதி தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து அவரை தாக்கியுள்ளார். இந்த வழக்கில் 4 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர் .

News September 20, 2024

திருப்பூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக அறை எண் 240ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ள கலெக்டர் கிறிஸ்துராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!