Tiruppur

News September 26, 2024

உடுமலையில் வெறிநாய் கடித்து ஐந்து பேர் காயம்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட காந்தி
சவுக் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன இந்த நிலையில் இன்று பள்ளிவாசல் பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆவேசமாக சுற்றி வந்த தெரு நாய் 5 பேரை கடித்ததில் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர் பொதுமக்களை அச்சுறுத்திய தெரு நாய் தப்பி ஓடியதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்

News September 26, 2024

பேருந்தில் லேப்டாப் மற்றும் 3 கிராம் தங்கம் மாயம்

image

பழனி ஆயக்குடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் சந்தோஷ் குமார் வயது 29. இவர் பழனியில் இருந்து திருப்பூர் பேருந்தில் ஏறி பெங்களூரு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் இருந்த தனது லேப்டாப் மற்றும் 3 கிராம் தங்கம் மோதிரம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் சந்தோஷ் குமார் புகார் அளித்துள்ளார்.

News September 26, 2024

காங்கயத்தில் ஆடுகள் இறப்பை தவறாக பதிவிட்ட யூடிபர் மீது புகார்

image

காங்கயத்தில் விவசாயி மோகன்குமார் என்பவரது தோட்டத்தில் தெரு நாய்கள் கடித்ததில் 27 ஆடுகள் இறந்தன. அதனை விவசாயிகள் பஸ்நிலையம் அருகே வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை அவதூறாகவும், ஆடுகள்  இறப்பை தவறாகவும் தனது யூடிப் சேனலில் பதிவிட்ட ஆனந்தி வெங்கட் சேனல் என்ற யூடிப் சேனல் ஆனந்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  விவசாயி மோகன் குமார் காங்கயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News September 25, 2024

உடுமலை அருகே கால்வாயில் விழுந்தவர் உயிரிழப்பு

image

திருப்பூர், உடுமலை எஸ்விபுரம் அருகே உடுமலை கால்வாய் பகுதியில் கணேசபுரம் என்னுமிடத்தில் அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று கரை ஒதுங்கியதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உயிரிழந்தவர் ஜீவா நகர் பகுதியில் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என தெரிய வந்ததது. இவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News September 25, 2024

6 வங்கதேச இளைஞர்கள் கைது

image

திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த 6 வங்கதேச இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கவுகாத்தி வழியாக 15 நாள்களுக்கு முன்பாக திருப்பூருக்கு 6 பேரும் வந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி பின்னலாடை நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களிடம் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாததால் 6 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

News September 25, 2024

திருப்பூர் மக்களின் கவனத்திற்கு

image

திருப்பூர் மாவட்டத்தில் பிறப்பு பதிவு செய்யாதோர், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்து பிறப்பு சான்று பெற்றுக்கொள்ள வேண்டும். குழந்தையின் பெயர் பதிவு, ஓராண்டுக்குள் இலவசமாகவும், அதற்கு மேல் ரூ.200 காலதாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். 2018ஆம் ஆண்டு முதலான பிறப்பு, இறப்பு சான்றிதழை www.crstn.org என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 24, 2024

திருப்பூரில் தொழில் தொடங்க கடன் ஆட்சியர் அழைப்பு

image

முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டம் மூலம் முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது 2971127 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  மேலும்  exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நியமனம்

image

தமிழக அரசின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசியல் திட்ட பயன்களை கண்காணிப்பு பட்டியல் ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள் தமிழக அளவில் கண்காணிப்பு அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக சென்னை தொழிற்சாலைகள் மற்றும் வணிக துறை இயக்குனர் நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

News September 24, 2024

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

image

திருப்பூர் அணைக்கட்டு பகுதியில் குடியிருப்பு ஒன்றில் குடியிருந்து வந்த நாகசுரேஸ், அவரது மனைவி விஜயலட்சுமி மகள் முத்தீஸ்வரி ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இறந்து 4 நாட்கள் ஆன நிலையில் அழுகிய நிலையில், அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வீட்டின் கதவை உடைத்து சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 23, 2024

லஞ்சம் பெற்ற விஏஒக்கு சிறை தண்டனை

image

திருப்பூர் மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதி சேர்ந்த தேவராஜ் என்பவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு கோவிந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் திருமலைச்சாமி என்பவருக்கு 5000 ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறைவடைந்து குற்றம் சாட்டப்பட்ட திருமலைச்சாமிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!