Tiruppur

News May 8, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை: டிரைவர் கைது

image

திருப்பூர், மங்கலம் அடுத்த சாமலாபுரத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாட்சா (30). இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று இரவு இவருடைய காரில் வட மாநிலத்தைச் சேர்ந்த (38) வயது பெண்ணும், 15 வயது சிறுமியும் வந்துள்ளனர். அப்போது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் இன்று சிக்கந்தர் பாட்சாவை கைது செய்தனர்.

News May 8, 2024

கிணற்றுக்குள் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

உடுமலையில் வசித்து வந்தவர் கிஷோர். இவர் தன் சொந்த ஊரான பள்ள பாளையம் கிராமத்தில் நேற்று மதியம் தோட்டத்திற்கு தண்ணீர் எடுத்து விடுவதற்காக சென்றார். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிஷோரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோர் உயிர் இழந்தார்.

News May 8, 2024

திருப்பூர் மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் போதிய அளவு குடிநீரை குடிக்க வேண்டும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க எலுமிச்சை ஜூஸ் மற்றும் இளநீர் உள்ளிட்ட பழச்சாறுகளை அருந்த வேண்டும், முடிந்தவரை வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 8, 2024

அரசு கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

image

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இந்த கல்வியாண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை www.tngasa.in என்ற இணையதள முகவரி மூலம் கடந்த ஆறாம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என நேற்று அரசு கல்லூரி முதல்வர் தெரிவித்தார். முதலில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு விருப்பமான பாடம் தேர்ந்தெடுப்பதற்கு எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

திருப்பூர்: ‘கல்லூரி கனவு 2024’ தொடக்கம்

image

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, திருப்பூரில் மே 10ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

திருப்பூரில் மழை வேண்டி அதிகாரி மவுன விரதம்

image

திருப்பூர் மாநகரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இதில் செயல் அலுவலராக சரவணபவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று கோவிலில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நேற்று செயல் அலுவலர் 2 மணி நேரம் மவுன விரதத்தில் ஈடுபட்டார். மவுனவிரதம் இருந்ததை, பக்தர்கள் வரவேற்று பாராட்டினர்.

News May 7, 2024

முதலிடம் பெற்ற மாணவியை பாராட்டிய எம்எல்ஏ

image

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று தமிழக முழுவதும் வெளியானது. இதில் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி மகாலட்சுமி 600 க்கு 598 மதிப்பெண் பெற்ற மாநிலத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளார். அவரை பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்எஸ்எம் ஆனந்தன் இன்று நேரில் சந்தித்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

News May 7, 2024

கொழுமம் கோவில் சித்திரை திருவிழா: எம்எல்ஏ தரிசனம்

image

மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான C.மகேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மேலும் பக்தர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அன்னதானம் வழங்கினார்.

News May 7, 2024

திருப்பூரின் இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம்!

image

மேற்குத்தொடா்ச்சி மலைத்தொடாில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் 1400 மீட்டா் உயரத்தில் உள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். இதில் 387 சகிமீ திருப்பூா் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே புலி, சிறுத்தை, கரடி, நாி, எறும்புத்தின்னி, புனுகுப்பூனை போன்றவையும் ராக்கெட் வால் ட்ராங்கோ, மீசை உள்ள புல்புல் பறவை, மரப்பறவை, புள்ளிப்புறா போன்றவையும், அமராவதி நீா்த் தேக்கத்தில் முதலைகளும் உள்ளன.

News May 7, 2024

திருப்பூர்: 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துளிர் விட்ட நட்பு

image

திருப்பூர் மாவட்டம், குமரலிங்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1969-74 வரை 55 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், மதுரை மற்றும் டில்லி, ஹைதராபாத் பகுதிகளிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். 55 ஆண்டுகளுக்கு முன் கற்பித்த ஆசிரியர்களும், தற்போது வயது முதிர்ந்த நிலையிலும், இந்த சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

error: Content is protected !!