Tiruppur

News May 9, 2024

வானியல் போட்டியில் உடுமலை மாணவி தேர்ச்சி

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை
ஜி வி ஜி கல்லூரி இளங்கலை கணித்துறை படித்து வரும் மாணவி ஹரிணி சர்வதேச அளவில் நடைபெற்ற வானியல் மற்றும் வானியல் போட்டியில் கலந்து கொண்டு இன்று முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். உடுமலை அறிவியல் கழகம் சார்பில் நடைபெற்ற பல்வேறு மாதிரி வகுப்புகளை பயன்படுத்தி வெற்றி பெற்றதாக மாணவி ஹரிணி தெரிவித்தார்.

News May 9, 2024

ஊராட்சி வாரியாக கோரிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம்

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் பகுதியில் ஊராட்சி வாரியாக கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நாம நாயக்கன்பட்டி, இலக்கம நாயக்கன்பட்டி, பச்சாபாளையம் ஆகிய ஊராட்சிகளில் அந்தந்த பகுதிகளில் ஆலோசனை கூட்டம் செய்தித் துறை அமைச்சர் சாமிமிநாதன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News May 9, 2024

மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தாராபுரம் சாலை கோவில் வழி பகுதியில் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனையொட்டி நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தி வரும் பொருட்களின் தரம் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் இன்று அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News May 9, 2024

திருப்பூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

திருப்பூர்: 8584 மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்

image

சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை கல்வி கற்ற பெண்கள் மட்டுமே உருவாக்க முடியும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இதுவரை கல்லூரி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலமாக 8,584 மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.

News May 9, 2024

திருப்பூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று(மே 9) ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள் கூட்டம்

image

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மண்டல உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. இதில் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசுகையில்,

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதும் , புதிய ஆர்டர் வரத்து அதிகரிக்கும்; அவற்றை எதிர்கொள்ள திருப்பூர் தயாராக வேண்டும்,” என, ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் நேற்று பேசினார்.

News May 9, 2024

லிம்கா புத்தக சாதனைக்காக சுவரில் தேர் கோலம்

image

திருப்பூர், ‘நிப்ட்-டீ’ கல்லூரியில் இந்தியா ‘லிம்கா’ புத்தக சாதனைக்காக, சுவரில் தேர் கோலம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில், 26 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், ‘நிப்ட்-டீ’ கல்லுாரியில், ‘லிம்கா’ சாதனைக்காக, சுவரில் தேர் கோலம் வரையப்பட்டுள்ளது.  கையை எடுக்காமல், தொடர்ந்து வரையும் தேர் கோலம், இந்தியா ‘லிம்கா’ புத்தக சாதனைக்காக வரையப்பட்டதாக கல்லுாரி நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.

News May 9, 2024

திருப்பூரில் சுமார் 4 லட்சம் பெண்கள் பயன்

image

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலமாக இதுவரை 3 லட்சத்து 99 ஆயிரத்து 148 குடும்பத்தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது என மாவட்டம் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

திருப்பூரில் கல்லூரி கனவு நிகழ்ச்சிக்கான ஆலோசனை

image

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியான கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடத்தப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சியை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

error: Content is protected !!