Tiruppur

News May 11, 2024

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 145 பேர் கைது

image

பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல் தலைமை தாங்கினார். நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 145 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

News May 11, 2024

திருப்பூரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

திருப்பூர் மாநகர், அங்கேரிபாளையம் மண்டல பாஜக சார்பில், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் கஸ்துாரி மஹாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மண்டல தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார், மாவட்ட துணை தலைவர்கள் பாலு, தங்கராஜ், மண்டல பொது செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News May 11, 2024

கணிதத்தில் 910 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்

image

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடைபெற்று நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழ் பாடத்தில் நான்கு பேரும், ஆங்கில பாடத்தில் ஆறு பேரும், கணித பாடத்தில் 910 பேரும், அறிவியல் பாடத்தில் 279 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 220 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாடம் வாரியாக மொத்தம் 1419 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

image

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி கௌசல்யா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இதில் ஒரே பிரசவத்தில் கௌசல்யா பால்பாண்டி தம்பதியினருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

News May 10, 2024

திருப்பூர் 26 ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.73% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.12 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.16 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் 26ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

12இல் சாதித்த திருப்பூர் 10இல் சறுக்கியது

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 92.84 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்தாண்டு 11ஆம் இடம் பிடித்த திருப்பூர் மாவட்டம் இந்த முறை 10 இடங்கள் குறைந்து 21வது இடத்தை பெற்றுள்ளது. அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் 87.73 ஆகும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாநிலத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்ற நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 21ஆம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

விடியல் பயணத் திட்டத்தின் கீழ் 15 கோடி மகளிர் பயன்

image

திருப்பூர் அரசு பஸ் களில் அனைத்து மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணமில்லா பயணம் செய்யும் நோக்கத்தில் விடியல் பயணத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட பனிமனையின்கீழ் 254 நகர பேருந்துகளில் சுமார் 15 கோடி மகளிர் நேற்று வரை பயனடைந்தனர்.

News May 10, 2024

10th RESULT: திருப்பூரில் 92.38% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 92.38% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.87% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.76% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

20வது இடம் பிடித்த திருப்பூர் ரயில் நிலையம்

image

தெற்கு ரயில்வே சார்பில் கடந்த 2023-24ஆம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது.100 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த பட்டியலில் திருப்பூர் ரயில் நிலையம் 20வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் 92 கோடியே 35 லட்சத்து 93 ஆயிரத்து 487 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!