India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக முழுவதும் பருவமழை தொடங்கி கனமழையாக பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரக்கூடிய நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மல்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து துறையினரும் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சியின் சார்பில் மழை வெள்ளம் மீட்பு கட்டுப்பாட்டு அறை எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி் மலையில் உள்ளது பஞ்சலிங்க அருவி.தற்போது அருவி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் தடுப்புகளை தாண்டி விழுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு் உள்ளது.எனவே திருமூர்த்தி மலை கோவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாவிற்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி பாளையம், காரணம்பேட்டை, கரடிவாவி, ஆறுமுத்தாம்பாளையம், காமநாயக்கன்பாளையம், டி கே டி மில் ,சின்னக்கரை, கணபதி பாளையம், லட்சுமி மில் ஆகிய பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ராக்கியாபாளையம் ஐஸ்வர்யா கார்டன் ஸ்ரீபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழிபட்டார். அமைச்சருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் டிரஸ்ட் தலைவர் ஞானகுரு வரவேற்றார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ராக்கியாபாளையம் ஐஸ்வர்யா கார்டன் ஸ்ரீபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழிபட்டார். அமைச்சருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் டிரஸ்ட் தலைவர் ஞானகுரு வரவேற்றார்.

திருப்பூர் மாநகராட்சியுடன் பழங்கரை ஊராட்சியை இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துக் கட்சி சார்பில் பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடை அடைப்பு, கருப்புக்கொடி கட்டுதல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்துவருகின்றன. முன்னதாக அவிநாசிலிங்கம்பாளையம் இ.கம்யூனிஸ் கட்சி அலுவலகத்தில் அக்டோபர் 7 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கடையடைப்பு, வேலை நிறுத்தம் நடத்த முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதி மக்கள், தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு, ஜவுளி எடுக்க திருப்பூரை தேர்வு செய்கின்றனர். பின்னலாடை நிறுவனங்கள், போனஸ் பட்டுவாடாவை இன்னும் துவங்கவில்லை; வரும் 19 மற்றும் 26ம் தேதிகளில், சம்பளத்துடன் போனஸ் வழங்க உரிமையாளர்கள் தயாராகிவிட்டனர். இருப்பினும், தீபாவளிக்கு புத்தாடை எடுக்க, போனஸை எதிர்பார்க்காமல், முன்கூட்டியே தொழிலாளர்கள் ஜவுளி எடுத்துவருகின்றனர்.

தமிழகத்தில் உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரம் (இரவு 7 மணி வரை) திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய (ஆரஞ்சு அலார்ட்) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பாலை பிரிவில் எரிசாராய உற்பத்தியை துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.