Tiruppur

News March 30, 2024

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டவர் வாபஸ்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திரசேகர் என்பவர் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். வேட்பு மனு தாக்கலுக்கு பின் கட்சி தலைமை தன்னை தொடர்பு கொள்ளவில்லை எனவும் , நாம் தமிழர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பாததால் வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்

image

திருப்பூரைச் சேர்ந்தவர் ஆல்வின். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக திருப்பூரிலிருந்து சாமலாபுரம் வழியாக காரில் நேற்று (மார்ச் 29) சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது மனைவி உட்பட 4 பேர் காரில் இருந்தனர். அந்த சமயம் இரண்டு நாய்கள் காரின் குறுக்கே வந்ததால் பிரேக் பிடிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

News March 29, 2024

திருப்பூர்: கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

image

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி கடந்த ஆறு மாத காலமாக அனைத்து விதமான அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பிஏபி ஆயக்கட்டில் பதிவு செய்யப்பட்ட ஆயகட்டுதாரர்களுக்கு தண்ணீர் வழங்காமல், தண்ணீர் திருடர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி கருப்பு கொடியை கட்டி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

News March 29, 2024

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம்

image

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 4, 250 கிலோ வாழைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், நேந்திரன் வாழைக்காய் முதல் தரம் கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையில் ஏலம் போனது .ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.82 ஆயிரம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 28, 2024

கணேசமூர்த்தி உடலுக்கு கனிமொழி அஞ்சலி

image

ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலை காலமானார். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

News March 28, 2024

திருப்பூரில் 419 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஆங்கில பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில், 31 ஆயிரத்து 87 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் 419 பேர் தேர்வு எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

திருப்பூரில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு அளித்தவர்களுக்கான பரிசீலனை இன்று நடைபெற்றது. மொத்தம் 38 வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் 15 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் , பல்வேறு காரணங்களுக்காக 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 28, 2024

பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளில் அணிவகுப்பு

image

திருப்பூர் மாநகர காவல் துறையின் KVR நகர் சரகத்தின் சார்பில் சரக காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கேவிஆர் நகர் காவல் நிலையம் முன்பு துவங்கிய கொடி அணி வகுப்பு செல்லம் நகர், பழ குடோன், கருவம்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

News March 28, 2024

திருப்பூரில் 38 பேர் வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கடந்த 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்றைய தினம் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 38 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் (திருப்பூர் கலெக்டர்) தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

திருப்பூர்: தனித்தேர்வர்கள் கவனத்திற்கு..!

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் தகுதி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருகின்ற 20ஆம் தேதிமுதல் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!