Tiruppur

News May 18, 2024

திருப்பூர் : நாளை கனமழைக்கான ஆரஞ்சு அலட்ர்

image

திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை (மே.19) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

திருப்பூரில் 8 செ.மீ மழைப்பதிவு

image

திருப்பூரில் நேற்று (மே.18) பெய்த மழை அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மடத்துக்குளம் பகுதியில் 8 செ.மீ, திருப்பூர் PWD பகுதியில் 6 செ.மீ, வெள்ளகோயில், அவினாசி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் 4 செ.மீ, வட்டமலை நீர்த்தேக்கம், வடக்கு தாலுகா அலுவலகம், நல்லதங்கால் நீர்த்தேக்கம், ஆட்சியர் அலுவலகம், அமராவதி அணை, மூலனூர் ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பதிவானது.

News May 18, 2024

திருப்பூர்: அதிகபட்சமாக 77 மிமீ மழைப்பொழிவு

image

திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதிய முதல் இரவு வரை தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மடத்துக்குளம் பகுதியில் 77 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News May 18, 2024

நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: விரைந்து முடிக்க வலியுறுத்தல்

image

நாகப்பட்டினம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளகோவில் வழியாக செல்கிறது. இந்தச் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் தினந்தோறும் சென்றுவருகின்றன. முதல்கட்டமாக கோவை முதல் பல்லடம் வரை இப்பணிகள் முடிவடைந்துவிட்டன. தற்போது பல்லடம் முதல் வெள்ளகோவில் வழியாக கரூர் வரை இதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் வெள்ளகோவில் பகுதியில் விரிவாக்க பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் நேற்று வலியுறுத்தியுள்ளனர்.

News May 18, 2024

திருப்பூர்: பட்டு வளர்ப்பு மையத்தில் மாணவர்கள் ஆய்வு

image

திருப்பூர் மாவட்டம் மானுப்பட்டியில் உள்ள விவசாயி ஒருவரின் இளம் புழு பட்டு வளர்ப்பு மனையில் வேளாண்மை கல்லூரி மற்றும் மணக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பட்டு வளர்ப்பு மையத்தில் அதிக கழிவுகள் வீணாக வெளியேறுவதை அறிந்த மாணவர்கள் கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கும் முறை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு விளக்கினர்.

News May 17, 2024

திருப்பூர்: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை திருப்பூரில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

திருப்பூருக்கு மாநிலத் தலைவர் வருகை

image

ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் ஆலங்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வ பெருந்தகை கலந்து கொண்டு கட்சியை வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

News May 17, 2024

13 வேட்பாளர்களுக்கு 1274 முகவர்கள் நியமனம்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலில் பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் திருப்பூர் எல்ஆர்ஜி அரசு கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு வருகின்ற நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 13 வேட்பாளர்களுக்கு 1274 முகவர்கள் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News May 17, 2024

வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

image

கோடை காலத்தில் பயணிகள் வசதிக்காக வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என நேற்று சேலம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை தோறும் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் நிஜாமுதீன் வாராந்திர ரயில் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ரயில்வே வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 17, 2024

திருப்பூர்: போக்குவரத்து நெரிசல்… மக்கள் அவதி

image

காங்கேயம் பஸ் நிலையத்திலிருந்து பழைய கோட்டை சாலை போக்குவரத்து பணிமனை வரை இருபுறமும் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்தச் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்தக் கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.

error: Content is protected !!