Tiruppur

News May 20, 2024

திருப்பூர் : நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

திருப்பூர்: தாய்லாந்து யோகா போட்டியில் சாதனை

image

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் தர்ணிகா. சிறு வயது முதலே யோகா, சிலம்பத்தில் ஆர்வமிக்க இவர் முறையாக பயின்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது தாய்லாந்தில் நடந்த பசிபிக்-ஆசியன் யோகா போட்டியில் கலந்து கொண்டு 3வது பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பெற்றோர், பயிற்சியாளர், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News May 20, 2024

திருப்பூர்: கனமழைக்கு வாய்ப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.20) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

திருப்பூரில் 364.50 மிமி மழை பதிவு

image

திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகரின் ஏராளமான பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வடக்கு பகுதியில் 60 மில்லிமீட்டர் மழையும், தெற்கு பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும், மூலனூரில் 38 மில்லி மீட்டர் மழையும், காங்கேயத்தில் 23 மில்லிமீட்டர் மழை என மாவட்டம் முழுவதும் 364.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News May 20, 2024

தொழிற்பயிற்சி பெற மாணவர்களுக்கு அழைப்பு

image

திருப்பூர், உடுமலை, தாராபுரத்தில் இயங்கிவரும் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதில் பயிற்சிபெறும் மாணவ, மாணவிகள் அரசின் வழிகாட்டுதல்படி சலுகைகள், ஊக்கத்தொகை, உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் https://www.skilltraining.gov.in என்ற இணையத்திலும், 0421-2429201 என்ற எண்ணிலும் விவரம் பெறலாம் என நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.

News May 20, 2024

திருப்பூரில் காலாவதியான பொருட்கள் விற்பனை!

image

திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு சில டிபார்ட்மெண்ட் கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக பாக்கெட் பொருட்கள், குளிர்பானங்கள் காலாவதி தேதி முடிந்த பின்னும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. அவற்றை பொதுமக்கள் கவனக்குறைவாக வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

திருப்பூர்: விதைப்பண்ணையை மாணவிகள் ஆய்வு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தளியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் செயல் விளக்கம் மற்றும் விதைப்பண்ணையை வேளாண்மை கல்லூரி மாணவ மாணவிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது பண்ணைக்கு வருகைதந்த வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மையத்தின் உதவி இயக்குநர் ரகோத்தமன் தென்னை வளர்ச்சி வாரியத்தின் பணிகளை விரிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் மாணவிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

News May 19, 2024

வேன் டிரைவர் கொலை: 7 பேர் கைது

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (30) லாரி ஓட்டுநர். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு மாயமானதாக அவரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தேடி வந்த நிலையில் இன்று திடீர் திருப்பமாக வடிவேலின் மாமனார், மனைவி உள்ளிட்ட 7 பேர் வடிவேலை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் அவினாசி பாளையம் போலீசார் கைது செய்தனர்.

News May 19, 2024

மீன் கடைகளில் அதிரடி ஆய்வு

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட போயம்பாளையம் மற்றும் அம்மன் நகர் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு நீங்கள் சுகாதாரமான முறையில் விற்கப்படுகின்றன வா? கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் இன்று காலை அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். பொது மக்களுக்கு நல்ல மீன்கள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது

News May 19, 2024

திருப்பூரில் காலநிலை இயல்பு வானிலை அறிக்கை

image

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கோவை வேளாண் கள ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள வாராந்திர வானிலை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் வரும் 22ஆம் தேதி அதிகபட்சமாக வெப்பநிலை 30 டிகிரி முதல் 34 டிகிரி வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 5 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மழை எதிர்பார்க்கலாம் என தெரிவித்தனர்.

error: Content is protected !!