India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்தவாறு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் எழுதி நித்யா உதவி ஆட்சியராகவும், வணிகவரித்துறை உதவி ஆணையராக பிரியதர்ஷினி, கூட்டுறவுத்துறை துணை பதிப்பாளராக சுபாஷினி ஆகியோர் தேர்வில் வெற்றி பெற்றனர். இவர்களை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சந்தித்து புத்தகங்கள் பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இந்நிலையில் குடிநீர் விநியோகம், தட்டுப்பாடு உள்ளிட்ட குடிநீர் தொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திருப்பூர் மாவட்டத்தில் 97.45 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 96.58 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 98.18% தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாநில அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்தது.
அவினாசி ஒன்றியம் தெக்கலூரை சேர்ந்தவர் கந்தசாமி (58). இவர் தெக்கலூரில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.இந்த நிலையில் இவர் நேற்று மாலை காரில் அவினாசி சென்று விட்டு தெக்கலூர் திரும்பினார்.அவினாசி ஆட்டையாம்பாளையம் அருகே கார் சென்ற போது அப்பகுதியில் இருந்த வேகத்தடையின் மீது ஏறியது.அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் மோதியதில் உயரிழந்தார்.
திருப்பூர் குமரன் ரோட்டில் மிகவும் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான புனித கத்தரீனம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழாவையொட்டி கடந்த 3-ந் தேதி மாலை கோவை மறை மாவட்ட அருட்தந்தை கிறிஸ்டோபர் தலைமையில் சிறப்பு திருப்பலி நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று மாலை 6.30 மணி வரை திருப்பூர், சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கலில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. அதே போல், கள்ளக்குறிச்சி, ராம்நாடு, கோவை, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவிநாசி செம்பியநல்லூர் ஊராட்சி ஸ்ரீ ராம் நகர் வ உ சி வீதியை சேர்ந்தவர் கார்த்திக், மனைவி வித்யா. இவர்களுக்கு மகன் அகில்(3). இவர்கள் மூவரும் நேற்று தங்கள் வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று எதிர்பாராத நேரத்தில் சிறுவன் அகில் கண்ணத்தில் கடித்து சென்றது. உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் தற்சமயம் வெகுவாக குறைந்து வருகின்றது. இந்த நிலையில் பிரதான கால்வாயில் ஷட்டர் பழுதானதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டு உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஷட்டரை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தற்சமயம் திருமூர்த்தி அணை 60 அடியில் 15 அடி நீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் கடந்த மார்ச் மாதம் 17 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் சிறையில் உள்ள மூலனூர் அதிமுக நிர்வாகி தினேஷ் (27), வெள்ளகோவில், பிரபாகர் (32), மணிகண்டன் (29), தமிழ்செல்வன் (எ) சதீஸ் (28), நவீன்குமார் (26), நந்தகுமார்(30), பாலசுப்பிரமணி (30), மோகன்குமார் (30) ஆகிய 8 பேர் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.