India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட இளைஞர்களுக்கு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு வரும் 8ஆம் தேதி தேர்வு முகாம் நடைபெற உள்ளதால் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரிலிருந்து தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் நேற்றைய தினம் தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் திருப்பூர் நோக்கி செல்வதற்காக தாராபுரம் வழியாக சென்றனர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிக அளவில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பூருக்கு படையெடுத்தனர்.

உடுமலையில் தவெக சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி விஷ்ணு ராம் , சக்தி விக்னேஷ், விக்னேஷ் ராஜசேகரன், கலைவாணன், தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்திலிருந்து 32 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் ஸ்மார்ட் பாய்ஸ் – மகிழன் சி.சி அணி மோதியது. இதில் 4 வித்யாசத்தில் உடுமலை ஸ்மார்ட் பாய்ஸ் அணி வெற்றி பெற்றது .வெற்றி பெற்ற அணிகளுக்கு நிர்வாகிகள் ராமன், காஜா , காப்பி வழங்கினார்.

தீபாவளி பண்டிகை முடிந்து வேலைக்கு மற்றும் சொந்த ஊருக்கு பொதுமக்கள் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் இருந்து தீபவாளிக்கு 1.5 லட்சம் பேர் சொந்த ஊருக்குச் சென்றனர். ஊர் திரும்புவர்களின் வசதிக்காக மதுரை மார்க்கமாக 100 பஸ்கள், திருச்சிக்கு 50 பஸ்கள், சேலத்துக்கு 25 பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாராபுரம் முஹம்மதியா நகர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்தும், வாக்குறுதியை நிறைவேற்றாத அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி ரமேஷ் ஆகியோரை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் வருகிற 7 ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணாசிலை அருகில் நடைபெற உள்ளதாக தாராபுரம் முஹம்மதியா நகர் பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் பெரமியத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54), ஓய்வுபெற்ற காவலர். தனது இல்லத்தில் இருந்த நிலையில் இரவு 1 மணி அளவில் திடீரென இதய வலி ஏற்பட்டு தனது மகள் மனைவியுடன் காரில் மருத்துவமனைக்கு செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அமராவதி ஆற்று பாலம் பள்ளத்தில் இறங்கியது. தீயணைப்பு துறையினர் காரை பத்திரமாக மீட்டனர். இதில் ராஜேந்திரன் உயிரிழந்தார். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீபாவளிக்கு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்லவும், இன்று அமாவாசை நாள் என்பதால் பழனி, சிவன்மலை உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு செல்லவும் திருப்பூர் பழைய பஸ் நிலையம் வந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த கன மழையின் காரணமாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குள் வெள்ளநீர் சென்றது. இதில் திருப்பூர் காங்கேயம் சாலையை காங்கேயம்பாளையம் புதூர் பகுதியில் ஆதிதிராவிடர் காலனியில் குமார் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் காயங்களுடன் தப்பினர்.

திருப்பூரில் இல்லங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில், மழைநீர் சேகரிப்பு என்பது மாயமாகியிருக்கிறது. சிறிய மழைக்கே வெள்ளக்காடாக மாறுகிறது. திருப்பூர் நகர, ஊரக பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக மிகுந்த பாதிப்பு ஏற்படுகின்றது. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் அழகு சுந்தரம், இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் ஆசிரியருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆசிரியர் பள்ளியை விட்டு வெளியேறிய நிலையில் மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு அளித்ததால் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.