India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் எஸ்.பெரியபாளையத்தில் உள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக்கப்படும் என்ற அறிவிப்பு இன்று வரை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. அதுபோல் ஆண்டிபாளையம் குளத்தில் படகுகள் வந்து விட்டன. இனி சவாரி துவங்குவது தான் பாக்கி’ என அறிவிப்புகள் வெளியாயின. தற்போது வரை படகு சவாரி துவங்கி, செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே இந்த குளங்களை சுற்றுலா தலமாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் வரும் 7ஆம் தேதி பல்வேறு பகுதியில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, சேவூர், வடுகபாளையம், தெக்கலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக இன்று காலை கோவை வந்தார். அவரை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவருமான இல. பத்மநாபன் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார். அப்போது திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.

பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. இதற்காக திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தங்கி பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இவர்கள் தீபாவளி பண்டிகை முடித்து தற்போது பணிக்கு திரும்பி உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள், மறுவாழ்வுஉள்ளிட்ட பல்வேறு வகையான இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்களை அனைத்தும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி அர்ச்சனா திருவண்ணாமலையில் இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கு பெற்றார். இவர் தற்போது தேசிய நீச்சல் போட்டிக்கு திருப்பூரிலிருந்து தேர்வாகியுள்ளார். இவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

புதுடில்லியில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து, 200 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு – 2 மாணவர் கோகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

கோவை, திருப்பூர் வழியாக சேலம், பெங்களூரு, சென்னை செல்லும் 4, 6 வழிச்சாலை உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி வழியே இந்த சாலை அமைந்துள்ளது. இதில், 24 மணி நேரமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும். நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள ஓட்டல், பேக்கரிக்கு செல்லும் சில வாகன ஓட்டிகள், என்.எச். ரோட்டில் தங்கள் வாகனங்களை நிறுத்துவதால் பல விபத்து நடைபெற்றும் இன்னும் அலட்சியம் காட்டுவது ஏன்?

➤ உடுமலை அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது மற்றொரு பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். ➤ தீபாவளி விடுமுறைக்கு பின் பின்னலாடை நிறுவனங்கள் இன்று முதல் இயங்குகிறது. ➤ திருப்பூரைச் சேர்ந்தவர்களுக்கு வரும் 8ஆம் தேதி ராணுவத்திற்கான சேர்க்கை முகாம் கோவையில் நடைபெறவுள்ளது. ➤ திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு அறங்காவலர் குழுவில் திருப்பூர் தொழிலதிபர் உட்பட, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்திற்கு அறங்காவலர் நிர்வாக குழு, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும். அவ்வகையில், புதிய அறங்காவலர் குழு அறிவிக்கப்பட்டது. அதில் டாலர் நிறுவனங்களின் தலைவர் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.