India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அரசு நீர், நிலம், ஆகாயத்தில், சாகச விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே’ விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் இதற்கான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மே 31ஆம் தேதிக்குள் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணமநாயக்கனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் சிவன்மலையில் உள்ளது புகழ்பெற்ற சுப்பிரமணியர் கோயில். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இந்த கோயிலுக்கு படிகட்டுகள், சாலை வழியாகவும் இக்கோயிலை அடைய முடியும். சிவவாக்கியர் சித்தர் இங்கு தங்கி முருகனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இக்கோயிலிலேயே புகழ்பெற்ற உத்தரப் பெட்டி உள்ளது. இந்த பெட்டியினுள், பக்தரர்களின் கனவில் வந்து முருகன் குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்யவர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருள்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சோதனை மேற்கொண்ட போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (21), ஏய்ட்டான் மகன் தினேஷ் (23) ஆகியோரையும், பெருமாநல்லூரில் கேவரொம் (26) உள்பட ஏழு பேரை பெருமாநல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் இளைஞர்கள் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் வடக்கு காவல் நிலைய குற்ற பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் தலைமையில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை ஊக்குவிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய செயலி மூலம் மாணவர்களை கண்காணிப்பது மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு ஆகிய முளைவுநிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி 213 தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் இந்த ஆண்டுக்கான முதுநிலை பிஎச்டி படிப்பினை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியினம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் https://overseas.tribal.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெஸ்ட் நகர் பகுதியில் உள்ள அம்மன் நகரில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவரது ஏழு வயது சிறுமி தர்ஷிகா சாலையை கடந்து உணவு தின்பண்டங்கள் வாங்கிவிட்டு மீண்டும் வீடு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது மேற்கு நோக்கி வந்த லாரி எதிர்பாராதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். லாரி ஓட்டுநரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காட்டிற்குள் கிடந்த ஆண் சடலத்தை இன்று மீட்டு காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர். காங்கேயம் அருகே சிவன்மலையில் இருந்து ஆலம்பாடி செல்லும் சாலையில் டாஸ்மார்க் கடை உள்ளது. கடைக்கு சிறிது தூரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் இன்று மீட்கப்பட்டது. இதுகுறித்து கொலையா என்ற கோணத்தில் காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.