Tiruppur

News March 10, 2025

திருப்பூரில் வேலை: ரூ.20,000 சம்பளம்

image

திருப்பூரில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஊதியம் <<>>ரூ.20,000. விண்ணப்பிக்க கடைசி நாள் 11.3.25 ஆகும்.

News March 10, 2025

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மனுக்கள் 

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனைபட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 741 மனுக்களை அளித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2025

திருப்பூரில் 14 மருந்தகங்களுக்கு உரிமம் ரத்து

image

திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது என மருந்து கட்டுப்பட்ட ஆய்வாளர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் 2024 ஜனவரி மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை திருப்பூர் மாவட்டத்தில் பரிந்துரை கடிதம் இல்லாமல் மருந்து விற்பனை செய்த 11 மருந்தகங்களுக்கு தற்காலிகமாகவும் மூன்று மருந்துகளுக்கு நிரந்தரமாகவும் உரிமம் ரத்து.

News March 10, 2025

பின்னலாடைக்கு வந்த சோதனை

image

“டாலர் சிட்டி” எனப்படும் திருப்பூரில் ஏற்றுமதி (ம) உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் அபார வளர்ச்சி பெற்றது. கோவிட் காலத்தில் கேரளாவில் சிறிய யூனிட் துவங்கி ஆடையாக வடிவமைத்து உள்ளுர் சந்தையில், பின்னலாடைகளை காட்டிலும் தரம் குறைவாக இருந்தாலும், ஒரு ஆடை விலை ரூ.25-க்கு விலை குறைவாக கிடைக்கிறது. இதனால், அங்கு விற்பனை சூடுபிடித்து கேரள மார்க்கெட் தொடர்பு திருப்பூருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.

News March 10, 2025

ரூ.99 லட்சம் பரிசு! போஸ்டர் வைரல்

image

மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பை கண்டுபிடித்தால், ரூ. 99 லட்சம் பரிசாக வழங்கப்படும் என பாஜக சார்பில் திருப்பூரில் ஒட்டப்பட்ட போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. அப்போஸ்டரில் முதல் மொழி தமிழ், இரண்டாம்மொழி ஆங்கிலம், 3ஆவதுமொழி மாணவரகளின் விருப்பத் தேர்வு. இந்த மும்மொழிக் கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.99 லட்சம் பரிசு வழங்கப்படும் என வாசகம் இடம் பிடித்திருந்தது.

News March 10, 2025

திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 09.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம், உங்களது பகுதியில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

News March 9, 2025

கேட்ட வரம் கொடுக்கும் கொண்டத்துக்காளியம்மன்

image

திருப்பூர் பெருமாநல்லூரில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில். சக்திவாய்ந்த கொண்டத்துக்காளியம்மனை, சேரர்கள், போருக்கு செல்லும் முன்பு வணங்கி செல்வார்களாம். தடைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட அம்மனை வழிபட்டால், குடும்ப பிரச்சனை தீர்வதோடு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குண்டம் திருவிழாவில், விரதம் இருந்து குண்டம் இறங்கினால், அம்மன் வேண்டிய வரத்தை தருவாளாம்.

News March 9, 2025

திருப்பூர்: அதிமுக காணொலி கலந்தாய்வு கூட்டம்

image

அதிமுக நிர்வாகிகள் பங்கு பெறும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி தலைமையிலான அனைத்து கழக மாவட்டங்களும் ஒரே சமயத்தில் இணையும் காணொளி கலந்தாய்வுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த காணொளி கலந்தாய்வு கூட்ட நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

News March 9, 2025

காங்கேயத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கரூர் சாலையில் உள்ளது வீரணம்பாளையம். இங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே திருப்பூரில் இருந்து கரூர் செல்ல 20 பேருடன் வேன் இன்று மாலை சென்றுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் வேனில் இருந்த 15 பேர் லேசான காயமடைந்தனர். பின் அவர்கள் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News March 9, 2025

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு கிடா விருந்து

image

திருப்பூர் 43வது வட்ட திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 1,072 பேருக்கு அறுசுவை கிடா விருந்து வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. ரோட்டில் நடைபெற்றது. இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார். இதில் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!