Tiruppur

News May 13, 2024

உடற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்த நடிகர் பரத்

image

சென்னையில் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த உடற்பயிற்சி நிலையம் திருப்பூரில் தங்களது கிளையை நேற்று திறந்தது. இதனை நடிகர் பரத் மற்றும் மாநிலத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி மைய தினேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News May 13, 2024

விதி மீறிய சாய ஆலைகளுக்கு நோட்டீஸ்

image

திருப்பூர்; எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு மையம் மற்றும் ஆறு சாய ஆலைகளுக்கு, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர். எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு மையத்தில், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை, செய்து வரும் நிறுவனம் சுத்திகரிப்புக்கான தொகையை வழங்காமல், நிலுவை வைத்துள்ளது. இதையடுத்து, தனியார் நிறுவனம், விளக்கம் அளிக்க அதிகாரிகள் நோட்டீஸ் நேற்று அளித்தனர்.

News May 12, 2024

சாதனை மாணவியை சந்தித்து ஊக்கத்தொகை வழங்கிய எம்எல்ஏ

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அம்மன் நகர் பகுதியில் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி மகாலட்சுமி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 598 மதிப்பெண் பெற்ற மாநில அளவில் முதலிடம் பெற்றார். அவரை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு மாணவியின் கல்விக்கான ஊக்கத்தொகையும் வழங்கினார்.

News May 12, 2024

திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்

image

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முதல் தாராபுரம் சாலை தெற்கு காவல் நிலையம் வரை அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இதன் காரணமாக பழைய பேருந்து நிலையம் முதல் தெற்கு காவல் நிலையம் வரை செல்லும் சாலை அடைக்கப்பட்டு வாகன ஓட்டிகல் மாற்று பாதையில் செல்ல மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 12, 2024

மே.16 இல் கனமழை பெய்யக்கூடும்

image

தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் சுட்டெரித்து வந்தாலும், சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வரும் மே.16 அன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

News May 12, 2024

விபத்தில் 5 பேர் படுகாயம்

image

கோவையில் இருந்து லாரி ஒன்று கரூருக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி சென்றுள்ளது. அப்போது கரூரில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் இன்று அதிகாலை காங்கேயம் அருகே வந்த போது லாரி மீது மோதியது. இதில்
காரில் பயணம் செய்த 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 12, 2024

தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

image

பலவஞ்சி பாளையத்தில் செயல்படும் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிரியதர்ஷினி 494 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். ஜெனிஷா 492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், சண்முகப்பிரியா 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றார். இந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுக்கள் நேற்று தெரிவிக்கப்பட்டது.

News May 11, 2024

திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.11) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

இபிஎஸ்ஸுக்கு பத்திரிகை வழங்கல்

image

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளருமான செங்கோட்டையன் ஆகியோர் தங்களது இல்ல திருமண விழா பத்திரிகையை முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரில் நேற்று இரவு வழங்கினர்.

News May 11, 2024

திருப்பூர்: தமிழில் நூற்றுக்கு 100 பெற்ற நான்கு மாணவிகள்

image

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. தமிழகத்தில் 8 மாணவிகள் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் நான்கு மாணவிகள் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். திருப்பூர் புலவஞ்சிபாளையம் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அக்ஷயா உள்ளிட்ட மூன்று பள்ளிகளை சேர்ந்த மாணவிகளும், அரசு பள்ளி மாணவியும் சாதனை படைத்தனர்.

error: Content is protected !!