India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் 2024 நாடாளுமன்ற தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர்அரிவாள் சுப்பராயன் அவர்கள் 14072 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் அவர்கள் 11296 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்திலும்,
பாஜக வேட்பாளர் முருகானந்தம் அவர்கள் 5110 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி 2844 நான்காவது இடத்திலும் உள்ளது.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பல்லடம் சாலைகள் உள்ள எல் ஆர் ஜி அரசு கல்லூரியில் எண்ணப்படுகின்றன. அதற்காக கல்லூரி வளாகத்திற்கு 100 மீட்டருக்கு முன்னால் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முகவர்கள் மற்றும் அலுவலர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் மொத்தம் 70.58% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் சுப்பராயனும் (சிபிஐ), அதிமுக சார்பில் அருணாசலமும், பாஜக சார்பில் முருகானந்தமும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு என்னும் மையம் பல்லடம் சாலை எல் ஆர் ஜி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக முகவர்கள் ஆலோசனை கூட்டம் கல்லூரி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது. இதில் நாளை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில்-கோவை சாலையில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான NRC ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள பஞ்சு குடோனில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில், மில்லில் பணிபுரிந்த விருதுநகரை சேர்ந்த மனோஜ் (20) என்ற வாலிபர் தீயில் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று வெள்ளகோவில் சொரியங்கினத்துப்பாளையம் பகுதியில் உள்ள சர்வாலயம் முதியோர் இல்லத்தில் ஒருங்கிணைந்த வெள்ளகோவில் திமுக சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில் வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி. முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காங்கேயம் அருகே பாப்பினி பச்சாபாளையத்தை சேர்ந்தவர் சரண் (21). குடிப்பழக்கம் கொண்ட இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு கணையம், நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவரது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுக்கவே வாலிபர் சரண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பல்லடம் அருகே உள்ள சென்னிமலை பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது வீட்டில் பூட்டை உடைத்து 20 ஆயிரம் பணம் மற்றும் ஐந்து பவுன் நகை திருடி சென்றனர். அதேபோல் மற்றொரு வீட்டில் நச்சால் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை தேடி சென்றனர். இந்த வழக்கில் போலீசார் கள்ளக்குறிச்சி சேர்ந்த ரஷீத் (23) என்ற வாலிபரையும் அவரது தாய் ரவிதா (41) என இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
தாராபுரம் அலங்கியம் சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சீத்தக்காடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்திய இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.