India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருப்பூர் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
திருப்பூரில் 18ஆவது சுற்றில் கே. சுப்புராயன் சிபிஐ- 4 லட்சத்து 9 ஆயிரத்து 331,
பி. அருணாச்சலம் (அதிமுக)- 3 லட்சத்து 3 ஆயிரத்து 327 ஏ.பி. முருகானந்தம் (பாஜக)-ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 896, எம்.கே சீதாலட்சுமி (பாஜக)-89 ஆயிரத்து 839 வாக்குகள் பெற்றுள்ளனர்.
எம்பி தேர்தலில் திருப்பூர் மாவட்டம் வித்தியாசமானது எனலாம். இந்த மாவட்டத்திற்கு மட்டும் 5 எம்பிக்கள் உள்ளனர். அதாவது, திருப்பூர் தெற்கு, வடக்கு – திருப்பூர் தொகுதியிலும், உடுமலை, மடத்துக்குளம் – பொள்ளாச்சி தொகுதியிலும், தாராபுரம், காங்கேயம் – ஈரோடு தொகுதியிலும், பல்லடம் – கோவை தொகுதியிலும் அவிநாசி – நீலகிரி தொகுதியிலும் அமைந்துள்ளன. எனவே, திருப்பூர் மாவட்டத்திலிருந்து 5 எம்பிக்கள் செல்கின்றனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் 17 சுற்றுகள் முடிவில் இந்திய கூட்டணியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 3,88,638 வாக்குகள் பெற்றுள்ளார். இதற்கு அடுத்தப்படியாக அதிமுக 28718, பாஜக 151111, நாம் தமிழர் 77333 வாக்குகள் பெற்றுள்ளனர். இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 101457 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் பத்தாவது சுற்று முடிவில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த வேட்பாளர் சுப்பராயன் 228692 வாக்குகள் பெற்றுள்ளார். இவர் அடுத்தபடியாக அதிமுக 171386, பாஜக 88572, நாம் தமிழர் 46102. இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 57306 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு இன்னும் பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் 7 சுற்றுகள் முடிவில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 1,58,400 வாக்குகள் பெற்றுள்ளார். அடுத்தபடியாக அதிமுக 1,17,776 ,பாஜக 62761, நாம் தமிழர் 31659. இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 40624 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் 6 சுற்றுகளில் முடிவில் இந்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுப்பராயன் 137799 வாக்கு பெற்றார். அதிமுக 102634, பாஜக 52770 , நாம் தமிழர் 27084,இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 35165 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் 2 சுற்றுகள் முடிவில்
இ.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுப்பராயன் 69559 வாக்குகள் பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக
அதிமுக 52397, பாஜக 24305, நாம் தமிழர் 13299பெற்றுள்ளனர். இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 17,162வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் 2 சுற்றுகள் முடிவில்
இ.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுப்பராயன் 45946 வாக்குகள் பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக
அதிமுக 37076, பாஜக 15213, நாம் தமிழர் 6069 பெற்றுள்ளனர். இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 9,869 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் உட்பட ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2-ம் சுற்றில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 53245 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35429 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 24753 வாக்குகள் பெற்ற நிலையில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 17816 திமுக முன்னிலை வைக்கிறது.
Sorry, no posts matched your criteria.