India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா வாமலை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். மது போதையில் இருந்த அவர் இன்று மதியம் திடீரென அப்பகுதியில் இருந்த 45 அடி உயரமுள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த குன்னத்தூர் போலீசார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சுரேஷை கீழே இறங்க செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 280 மனுக்களை அளித்துள்ளனர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழா கடந்த ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நல்லூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு இன்று அசைவ உணவு வழங்கப்பட்டது. மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அசைவ உணவினை வழங்கினார்.
காங்கேயம் அருகே முள்ளிப்புரம், எலந்தக்காட்டுபதியை சேர்ந்தவர் முருகேசன் (59), தேங்காய் மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று கிளாங்காட்டுவலசில் துரைசாமி என்பவரது தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் போது, மரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் கடித்துள்ளது. பெருந்துரை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பல்லடம் வனம் அமைப்பு, திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பு மற்றும் பொன்னி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் மற்றும் பெண்களுக்கான புற்றுநோய் கண்டறிவதற்கான இலவச மருத்துவ முகாம் ஆகியவை, வனாலயம் அடிகளார் அரங்கில் நேற்று நடைபெற்றது. ரத்ததான முகாமில், மொத்தம் 29 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் வஞ்சிபாளையம் ரயில் நிலையம் அருகே இன்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 12 வயது மதிக்கத்தக்க சிறுவனும் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாராபுரம் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிடக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜே பீட்டர் கோட்டத் தலைவர் தலைமை தாங்கினார். மேலும் க.செந்தில்குமார் கோட்டச் செயலாளர் விளக்க உரையாற்றினர்.
தாராபுரத்தில் நாளை 5 ஆயிரத்து 629 பேர் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதுகிறார்கள். டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.
தாராபுரத்தில் மகாராணி கலைக் கல்லூரி, விவேகம் பள்ளி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித ஆலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் 5629 பேர் தேர்வு எழுதுகிறார்கள் என வட்டாட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
தாராபுரம் பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூன் 10ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் புஷ்பலதா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன்.06) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மடத்துக்குளம் பகுதியில் 9 செ.மீட்டரும், வட்டமலை பகுதியில் 6 செ.மீட்டரும், அவராவதி அணை, திருமூர்த்தி அணை, நல்லதாங்கல் ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
Sorry, no posts matched your criteria.