India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் எல்ஜி எஃப்ஐ தமிழ்நாடு கையுந்து பந்து அணிக்காக 5 பிரிவுகளில் 5 பேர் தேர்வு பெற்றிருந்தனர். மாணவிகளுக்கான தேசிய அளவில் நடந்த கையுந்து போட்டியில் நம்பியூரில் உள்ள குமுதா பள்ளியின் பனிரெண்டாம் வகுப்பு மாணவி எஸ்.ரஞ்சிதா வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். இந்த மாணவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சான்றிதழ் வழங்கினார்.
குளித்தலை லாலாபேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே பொறியியல் பணி நடைபெறுவதால் ரயில்கள் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜீன்.20 பாலக்காடு – திருச்சி ரயில் கரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு ,காந்தளூர், தூவானம் போன்ற பகுதிகளில் தற்சமயம் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது .தற்போது வினாடிக்கு 87 கன அடியாக உள்ள நிலையில் மொத்த 90அடியில் 50.82 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் கட்சியினர் நிர்வாகிகள் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். கோவையில் நடைபெற உள்ள வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, செல்வராஜ் எம்எல்ஏ நேரில் சந்தித்து பொன்னாடை, பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், மைய நிர்வாகி-1, களப்பணியாளர்-5 மற்றும் பல்நோக்கு உதவியாளர்-1 என மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. மேலும் தகவலுக்கு <
திருப்பூர், வெள்ளகோவிலில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வீரக்குமாரசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள தேங்காய், பழக்கடை மற்றும் சிதறு தேங்காய் சேகரிப்பு உரிமம் ஆகியவற்றிற்கான ஏலம் வரும் 28 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோவில் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினாம்பாள் இன்று தெரிவித்துள்ளார்.
உடுமலை அருகே தேவனூர் புதூரில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் எரிசனம்பட்டியில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அனுப்பர்பாளையம் முதலாவது மண்டலத்திற்குட்பட்ட 9 வீதிகளுக்கு பெயர் பலகை இல்லாததால் முகவரி சொல்வதில் குழப்பம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் குழப்பத்தை தீர்க்கும் வகையில் 9 வீதிகளுக்கும் பெயர் பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளதாவது: உடுமலையில் 107 மகளிர் தங்கும் விடுதிகள் பதிவு செய்துள்ளன. மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகள், கல்லூரி விடுதிகள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்து இருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத தனியார் விடுதிகளின் நிர்வாகிகள், மேலாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மடத்துக்குளம் தாலுகாவில் சங்கராமநல்லூர் ருத்ராபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகின்ற ஜூன் 15-ம் தேதி ரேசன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறுகிறது. முகாமில் ரேஷன் கார்டுகள் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.