India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று மாலை கோல்டன் நகர் பகுதியில் உள்ள பேக்கரியில் டீ அருந்தி கொண்டிருந்த போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் இவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் ஜூன் 23 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த நம்பியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (65). இவர் அப்பகுதியில் உள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து புகாரின்பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் மணிகண்டனை நேற்று கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உடுமலை அருகே
கோமங்கலம் துணை மின் நிலையம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோமங்கலம் திப்பம்பட்டி, கோமங்கலம் புதூர், சங்கம்பாளையம் பண்ணை கிணறு, கோழி குட்டை, சீலக்காம்பட்டி
மூக்கூடல், ஜல்லிக்கட்டு, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமபுரம், செட்டிபாளையம் தேவநல்லூர் பகுதியில் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் குட்டைதிடல் அருகில் உள்ள ஜாமியா பள்ளிவாசலிலிருந்து ஊர்வலம் தளி ரோடு பொள்ளாச்சி ரோடு வழியாக இறைவனை வேண்டியவாறு சென்ற ஊர்வலம் கொல்லப்பட்டறை அருகில் உள்ள பூர்வீக பள்ளிவாசலில் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அனைவரும் பிரார்த்தனை செய்தனர். பக்ரீத் ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இஸ்லாமியர்களின் ஈகைத்திரு நாளாம் பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் நொய்யல் வீதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பாக சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வுகாண உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி கலெக்டரும் ஒவ்வொரு மாதமும் 3வது புதன் ஒருநாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு செல்ல வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள வாவிபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன், இவரது மனைவி சரோஜினி. இவர்களது மகன் அருண்குமார் (35) மற்றும் லட்சுமணனின் பேத்தி மகிழினி (3) உட்பட ஆறு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபர் கண் இமைக்கும் நேரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே நேற்று உயிரிழந்தனர்.
தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற முத்துராஜ் என்பவருக்கு பணம் வராததால் அருகில் இருந்த மர்ம நபர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு வேறு மையத்தில் பணம் எடுக்குமாறு சொன்னார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் போலீசில் புகாரளித்தார். இது குறித்த புகாரின்பேரில் பன்னீர்செல்வம் என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காங்கேயம் அருகே அரசு பேருந்து – சரக்கு வேன் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
கொடுமுடியில் இருந்து காங்கேயம் வழியாக கோபிக்கு அரசு பேருந்து இன்று சென்று கொண்டிருந்தது. காங்கேயம் கரூர் ரோடு பிரிவு அருகே பேருந்து சென்றபோது எதிரே வந்த சரக்குவேன், பேருந்து மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.