India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே செங்கோடம்பாளையம் பிரிவு பகுதி உள்ளது. இதில் இன்று மாலை 5 மணியளவில் மாருதி ஜென் காரும், ஹூண்டாய் காரும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 கார்களில் வந்த 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கேயத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் போனது. இதையடுத்து நேற்று காங்கேயம் மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில் நடத்தப்பட்ட சோதனைகள் விதிமீறிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு ரூ.12000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காங்கேயம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது
வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான, சந்தானகிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி மாலதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் யோகா செய்து அசத்தினர்.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 79 பணியிடங்கள் மாவட்ட நல சங்கத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தாராபுரம் மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கே.இ. பிரகாஷ் நாளை இப்பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொள்கிறார். பொதுமக்களை சந்திக்கும் போது திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் இன்று தெரிவித்துள்ளார்.
நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். சாதி மறுப்பு திருமணம் செய்து வைப்பதாக கூறி சாதிய கலவரத்தை தூண்டும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதியூர், சாய்ராம் நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவர் திருப்பூரில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 15 ஆம் தேதி இவரது வீட்டிற்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி 8 பேர் சோதனையிட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் விசரணை நடத்தியதில் உதயம் பத்திரிக்கை நிருபர் நவீன்பிரசாத்(38), மாதேஷ்வரன்(36), மகேந்திரன்(31), சுபாஸ் சந்திரபோஸ்(32) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின் படி நடப்பு ஆண்டுக்கான ஜமாபந்தி நிகழ்வு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் இன்று(ஜூன்.20) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. முதல் நாளில் உடுமலை வட்டத்தில் உள்ள கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு வட்டாட்சியர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் பிரதம மந்திரி ராஷ்டிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. கல்வி, விளையாட்டு, கலை, சமூக சேவை துறைகளில் வீரதீர செயல்களை செய்து தனி தகுதி பெற்ற குழந்தைகள் விருதுக்கு https://awards.gov.in. என்ற இணையதளம் வாயிலாக 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் +2 டூ தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெறாத மாணவர்கள் ,தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடைப்பெறுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளை முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.