Tiruppur

News June 23, 2024

திருப்பூர் அருகே 17 பேர் அதிரடி கைது

image

திருப்பூர் மாவட்டம், ஊதியூர் சுள்ளிக்காட்டு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் நடப்பதாக ஊதியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர், காங்கேயம், பல்லடம், குண்டடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 17 பேரை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 சண்டை சேவல்கள், ரொக்கம் ரூ. 20 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

News June 23, 2024

திருப்பூர்: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், திருப்பூர் உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

திருப்பூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

image

திருப்பூரில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி பலிக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அளவில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 23, 2024

திருப்பூரில் 80 பேருக்கு உடனடி பணி நியமன ஆணை

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்தனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 22 பேர் கலந்து கொண்டனர். இதில் 80 பேர் உடனடியாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

News June 23, 2024

கரூர் எம்பிக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட தலைவர்

image

தாராபுரம் பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தென்னரசு. இவர் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தார். இவர் கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றினார். தற்போது கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக ஜோதிமணி வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளராக இருந்த தென்னரசு, ஜோதிமணிக்கு வாழ்த்துக்களை நேற்று தெரிவித்தார்.

News June 22, 2024

திருப்பூரில் 525 பேருக்கு பணி நியமன ஆணை

image

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் கல்வி பயின்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெற்றது. 1444 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட இந்த வேலை வாய்ப்பு முகாமில் 525 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

News June 22, 2024

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

திருப்பூர் தெற்கு மாவட்டம் வெள்ளகோவில் நகரம் மற்றும் குண்டடம் ஒன்றியம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல பத்மநாபன் தலைமையில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் முன்னிலையில் மாற்று கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் மாவட்ட கழக ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 22, 2024

திருப்பூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று
(ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, திருப்பூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News June 22, 2024

திருப்பூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 28ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளதால், விவசாயிகள் மனுக்கள் கொடுத்து தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News June 22, 2024

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி

image

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் – மூலனூர் ரோட்டில் உள்ள பொன்னுச்சாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே. இ.பிரகாஷ் நிர்வாகிகளை சந்தித்து நேற்று நன்றி தெரிவித்தார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன், நகர செயலாளர் சபரி முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!