Tiruppur

News March 12, 2025

இரவு நேர ரோந்து பணியில் காவல் அதிகாரிகள்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 12.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News March 12, 2025

காடையூர் அருகே வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காடையூர், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (68). மூதாட்டியான இவர், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவரது ஆட்டுப்பட்டிக்குள் இன்று அதிகாலை புகுந்த வெறி நாய்கள், பட்டியில் இருந்த 4 வெள்ளாடுகளை கடித்து குதறியது. இதில் ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது தொடர்பாக போலீசார் மற்றும் கால்நடைத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 12, 2025

திருப்பூர்: சுக்ரீஸ்வரர் கோயில்!

image

திருப்பூர், ஊத்துக்குளி சாலையில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாம். இங்கு பஞ்ச பூதங்களையும் குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோயிலில் உள்ளன. கலியுகத்தில் தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்ட சுக்ரீஸ்வரரை, நாம் வணங்கினால் நினைத்து நடக்குமாம்.

News March 11, 2025

இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகள் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 11.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பொதுமக்களுக்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 11, 2025

லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

image

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதிக்குட்பட்ட இடையம்பாளையம் பகுதியில் சிட்டாவில் பெயர் சேர்க்க 7000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் இன்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இடையம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் உதவியாளர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News March 11, 2025

திருப்பூரில் தபால் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருப்பூர் தலைமை தபால் நிலையம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு தபால் துறை வழங்கும் சேவைகளை பற்றி விவாதிக்க, குறைகள் இருந்தால் தெரிவிக்க, தபால் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. தபால்துறை சார்ந்த யோசனை, புகார்கள் இருப்பின் வரும் 14ம் தேதிக்குள், ‘பட்டாபிராமன், தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் 641601’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News March 11, 2025

நாளை கடைசி நாள்!

image

திருப்பூர் இளைஞர்களுக்கு வேலை திறன்களை வளர்த்துகொள்ள PM Internship Scheme திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிற்பயிற்சி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் டிகிரி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. இதை ஷேர் செய்யவும்.

News March 11, 2025

பல்லடம் கொலை: 100 வது நாள் ஆகியும் மர்மம்

image

திருப்பூரில் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் 100 நாட்கள் ஆகியும் தற்பொழுது வரை விடை கிடைக்காமல் விசாரணை நீண்டு வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அமலாத்தாள். அவர்களது மகன் செந்தில்குமார் ஆகியோர் கடந்த நவ.29ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து 18 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், இது வரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.

News March 11, 2025

குண்டம் திருவிழா: ரூ.5 லட்சம் மதிப்பில் இன்சூரன்ஸ்

image

திருப்பூர், பெருமாநல்லூர் ஸ்ரீ கொண்டத்து காளியம்மன் கோவில் 2025 ஆம் ஆண்டு குண்டம் திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. குண்டம் திருவிழாவின்போது பக்தர்கள் காயமடைந்தால் அவர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் இன்ஷூரன்ஸ் செய்து அமைதியான முறையில் குண்டம் திருவிழா நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர் சரவணன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

News March 10, 2025

திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் உள்ள இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களது தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!