Tiruppur

News July 5, 2024

திருப்பூர்: மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில்
தமிழ்நாடு தினம்
ஜூலை 10ம் தேதி கொண்டாடும் நிலையில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் பங்கேற்கலாம் என மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி போட்டிகளில பங்கேற்க விரும்புவோர் தகவல்களை ddtamil607@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். கட்டுரை போட்டி ‘ஆட்சி மொழி தமிழ்’ என்ற தலைப்பில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2024

இலவசமாக மண் எடுக்க திருப்பூர் ஆட்சியர் அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண்ணை விவசாயப் பணிகள் மற்றும் மண்பாண்ட தொழிலுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து திருப்பூர் மாவட்ட அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேவைப்படும் விவசாயிகள் https://tnesevai.gov.in, www.tirupur.nic.in என்ற இணையதளங்களில் விண்ணப்பித்து பயன் அடையலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

திருப்பூர்: ஓபன் மைக்கில் எச்சரித்த எஸ்பி

image

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எஸ்ஐ-க்கள் 18 பேரை கடந்த 29ம் தேதி இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டிருந்தார். ஆனால் பல எஸ்ஐ-க்கள் இடம் மாறாமல் பழைய பணியிடங்களில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று ஓபன் மைக்கில் (மைக் – 10) பேசிய மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா இடமாறாத எஸ்ஐ-க்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

News July 4, 2024

திருப்பூர்: 13 எஸ்.ஐ இடமாற்றம் 

image

திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் 13 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களை இட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி அபிஷேக் குப்தா இன்று (ஜூலை 4) உத்தரவு பிறப்பித்தார்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 18 எஸ்.ஐ இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 13 எஸ். ஐ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் இன்றே புதிய பணியிடங்களுக்கு செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News July 4, 2024

திருப்பூர்: சிறப்பு குறைதீர் முகாம் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் பணியாற்றும் படை வீரர்கள் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஜூலை 10ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வழங்கி பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 3, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 3, 2024

திருப்பூர்: குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

image

திருப்பூர் மாவட்டத்தில் 1,303 முதன்மை மையங்கள், 169 குறு மையங்கள் என மொத்தம் 1472 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. மாவட்டத்தில் பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள
451 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 92 ஊட்டச்சத்து பெட்டகம் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 549 குழந்தைகளின் தாய்மார்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News July 3, 2024

10ம் வகுப்பு துணைத் தேர்வு: 8ம் தேதி துவக்கம்

image

திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 180 பேரில் 27 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றனர். 2,301 பேர் தேர்ச்சி பெறவில்லை பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் துணைத்தேர்வு வருகின்ற எட்டாம் தேதி 11 மையங்களில் நடைபெறுகின்றது. மொத்தம் 364 பேர் தேர்வு எழுத உள்ளனர் என மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News July 3, 2024

திருப்பூர்: இறால் பண்ணைகளை பதிவு செய்ய உத்தரவு

image

திருப்பூர் மாவட்டத்தில் கடல்நீர் வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய கட்டுப்பாடு பகுதிகளுக்கு வெளியே இயங்கும் நன்னீர் வன்மை இறால் பண்ணைகளை வரன்முறைப்படுத்தி பதிவுசெய்யும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் பதிவுபெறாமல் இயங்கும் நன்னீர் வன்மை இறால் வளர்ப்பு பண்ணைகள் பதிவுக்கு விண்ணப்பிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News July 2, 2024

தேவாலயங்களை பழுதுபார்க்க நிதி உதவி

image

திருப்பூர் மாவட்டத்தில் சொந்த கட்டங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேவாலயங்களின் வயதிற்கேட்ப ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை மானியத்தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உதவித்தொகையை பெற மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!