India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடுமலை அருகே அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் தற்போது அணை நீர்மட்டம் 85. 24 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பிரதான மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் கரையோர கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
உடுமலை அருகே பெதம்பம்பட்டி என் வி மெட்ரிக் பள்ளி மாணவி மிர்துளா மகாராஷ்டிராவில் நடைபெறும் ஜூனியர் பிரிவு மாணவிகளுக்கானகால்பந்து போட்டியில் விளையாடுவதற்கு தேனியில் நடைப்பெற்ற தேர்வு போட்டியில் வெற்றி பெற்றார். மாணவிக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கணேஷ் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
திருப்பூர்,பாண்டியன் நகர் பகுதி வார்டு எண்:2, சத்யா நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட நியாய விலைக் கடையினை, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே. சுப்பராயன் MP மற்றும் மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு நேற்று திறந்து வைத்தனர். உடன்மண்டல தலைவர் கோவிந்தராஜ் , மாமன்ற உறுப்பினர் மாலதி கேபிள் ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவிற்கு உட்பட்ட கணபதிபாளையம், தப்பிரெட்டிப்பாளையம், ரங்கம்பாளையம், சாவடிப்பாளையம், புதூர், நாம்கரம் பாளையம் போன்ற ஊர்களில் இன்று அதிகாலை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து மின்சார வாரியமும், பொதுப்பணி துறையும் மழை நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மழையின் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சார வாரியம் மின் இணைப்பை துண்டித்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழக முழுவதும் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் இன்று 13 இணையர்களுக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தலைமை ஏற்று நடத்தி வைத்தனர்.
உடுமலை அமராவதி அணையின் நீர் மட்டம் தற்போது 90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3855 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்படும். எனவே அமராவதி ஆற்று கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காங்கேயம் அருகே பொடாரன்பாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. (19-10-2024) இக்கோவிலுக்கு பக்தர்கள் வந்துள்ளனர். அப்போது அருகே இருந்த தென்னை மரத்தில் இருந்து பறந்து வந்த மலைத்தேனீக்கள் 3 பெண்கள் உள்பட 12 பக்தர்களை விரட்டி கடித்துள்ளது.பின் அனைவரும் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வீடு திரும்பினர்.
திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பருவமழை பெய்து பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் தொடங்க உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற விதிமுறை அமலில் உள்ளது. அருகில் உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் இளம் சிறார்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடிய வகையில் பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகரில் இன்று ஒரே நாளில் பொது இடங்களில் புகைபிடித்ததாக 69 பேருக்கு போலீசார் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ஆம் தேதி காலை 10:30 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமை வகிக்கிறார். முதலில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுக்க வேண்டும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கையை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.