India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாநகரில் இன்று இரவு பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு நேரில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொள்வதோடு, 100 எண்ணையும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கே வி ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாணவர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் செல்லம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனார்.
திருப்பூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். ஒவ்வொரு தாலுகாவிற்கும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி உள்ளிட்ட விபரங்களை <
திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Officer (FMCG) பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் <
திருப்பூர், அவினாசி அருகே வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் அவரது தந்தை மற்றும் தாயார் உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி, ஜாமின் கேட்டு தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
➡️ திருப்பூர் மாவட்டத்தில் நாளை 33,131 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நாளை (ஜூலை.12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாவிலும் நடைபெற உள்ளது. இதில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். திருப்பூர் மக்களே, மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.
பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் அமைந்துள்ள அருணோதயா தியேட்டரில் பறந்து போ படம் திரையிடப்பட்டது. இந்தநிலையில் ரசிகர்களிடம் திரைப்படத்தின் கருத்துக்களை கேட்க நடிகர் சிவா அங்கு வந்தார். மேலும் திரைப்படத்தை பார்த்த பொதுமக்களிடம் திரைப்படம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் கூறுகையில், உலக அரசியலில் தான் ஈடுபடப் போவதாகவும், நானே அகில உலக சூப்பர் ஸ்டார் என்றும் நகைச்சுவையாக அவர் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை, அவிநாசி பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இன்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்12-ம் தேதி வரை <
Sorry, no posts matched your criteria.