India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக தண்ணீர் தினம் மாலை வருகின்ற 23ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை பற்றி விவாதித்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்புதுறை (ம) தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் வரும் 29ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்றலாம். வேலை இல்லாதவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமை மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் Share பண்ணுங்க.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். இதனைக் கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் சார்பில் அங்கேரிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் குடோனை முற்றுகையிட்டு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 272 பேரை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்ரன் குமார் (21). இவர் அம்மாபாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். திருப்பூர் கோட் செட் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் போலீசார் இறந்த உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூரில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.
ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி திறக்கப்பட்டது. திருப்பூரில் துவங்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் மூலம் கடந்த ஜனவரி 24 முதல் மார்ச் 14 வரை 1,400 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 1,100க்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகளான 5ஆம் வகுப்பு பயிலும் மாணவி தியாக்ஷ்மி நேபாள நாட்டில் நடைபெறும் சர்வதேச கராத்தே மற்றும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதற்காக செல்கிறார். இதையறிந்த இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் மாணவியின் பயணச்செலவை ஏற்றுக்கொண்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நேற்று தியாக்ஷ்மியிடம் ரூ.60 ஆயிரம் வழங்கினார்.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில். சிவன்மலை முருகன் கோயில். திருமுருகன் பூண்டி கோயில். அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில். ஊத்துக்குளி முருகன் கோயில். பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில். வாமனஞ்சேரி வலுப்பூரம்மன் கோயில். திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயில். கருவலூர் மாரியம்மன் கோயில், அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.
திருப்பூர் வடக்கு போலீசார், ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி, சந்தேகப்படும் வகையில் வந்த, வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர். அதில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜன், 20 என்பது தெரிந்தது. சோதனையில், 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.