India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், ஊதியூர், மூலனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
பல்லடம் அருகே பூமலூர் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமாத்தாள் (110) வயது மூப்பால் நேற்று உயிரிழந்தார். கணவர் முத்துசாமி 22 ஆண்டுகளுக்கு முன் காலமானார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள், 44 பேரன், பேத்திகள் உள்ளனர். 2013இல் சதாபிஷேகம் கொண்டாடப்பட்டது. இறுதிச்சடங்கில் ஐந்து தலைமுறையினர் கலந்து கொண்டனர்.
செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்குவதில், மாநிலத்தில் 2வது இடத்தை திருப்பூர் தபால் கோட்டம் பெற்றுள்ளது. இதுகுறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறுகையில், இத்திட்டத்தில் இன்டர்நெட், மொபைல் பேங்கிங், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் திட்டம் வாயிலாக பணம் செலுத்த முடியும். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் உடனே, இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். ( Share பண்ணுங்க)
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்டத்தின்கீழ் மாணவர்கள் பதிவு செய்வதற்கான கால அளவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் இந்த திட்டத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை பதியலாம்.
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வருகின்ற 23ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால், மார்ச் 23ஆம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டத்தை, மார்ச் 29ஆம் தேதி நடத்த, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பொன்னையா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கோவை அருகே சரவணம்பட்டியை சேர்ந்த சுப்புலட்சுமி (40) ஸ்கூட்டரில் சென்றபோது, பல்லடம் அருகே ஒரு கார் மோதியது. இதில், அவர் காரின் முன்பகுதியில் சிக்கி, அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அருகில் பைக்கில் வந்த கிருஷ்ணகுமார் (34) லேசான காயமடைந்தார். பொதுமக்கள் காரை பிடித்து நேற்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் காரை ஓட்டிய சதீஷ்குமாரை (40) விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், தங்களது பகுதியில் இன்று, 18.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம், சேவூர், மடத்துக்குளம், குண்டடம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூரில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பெருமளவில் உள்ளனர். அவர்களுக்காக வரும் 20ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலை 10 மணிக்கு இந்த பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. மேலும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு 04212248524 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்
உலக தண்ணீர் தினம் மாலை வருகின்ற 23ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை பற்றி விவாதித்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது
Sorry, no posts matched your criteria.