India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏ.இ.பி.சி.(ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம்)
சார்பில், திருப்பூரில் ‘ஆடைத் தொழிலுக்கான ஏற்றுமதி நிதி மற்றும் வர்த்தக வசதி’ கருத்தரங்கு திருமுருகன்பூண்டியில் இன்று நடந்தது. ஏஇபிசி தென் பிராந்திய பொறுப்பாளர் ஏ.சக்திவேல் கலந்து கொண்டு பேசினார். இதில் கோவை இணை இயக்குநர் ஆனந்த் மோகன் மிஸ்ரா, ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பொள்ளாச்சி ரவுண்டானா அருகே மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இந்த மழை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலை ஓரத்தில் தேங்குவதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மையம், மற்றும் காங்கேயம் கல்வி குழும் நிறுவனங்கள் நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நத்தக்காடையூர் பில்டர் கல்லூரியில் நடக்கிறது. 150 நிறுவனங்கள் பங்கு பெறும் முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் டிகிரி வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மைவாடி ஊராட்சி கருப்புசாமி புதூரை சேர்ந்த கே.ஈஸ்வரசாமி அவர்கள் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தற்போது மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் லட்சுமி , மாநகர துணை ஆணையர் கிறிஸ் யாதவ் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், ஆக்.2ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். கிராம சபைக் கூட்டத்தில்
கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை குறித்து விவாதித்திட கலெக்டர் கிறிஸ்து ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மையம், மற்றும் காங்கேயம் கல்வி குழும நிறுவனங்கள் நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நத்தக்காடையூர் பில்டர் கல்லூரியில் நடக்கிறது. 150 நிறுவனங்கள் பங்கு பெறும் முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் டிகிரி வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கோ-ஆப் டெக்சில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விற்பனைக்காக அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கோ-ஆஃப் டெக்ஸில் சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் கிறிஸ்தவராஜ் தொடங்கி வைத்தார். கடந்தாண்டு ரூ.84.76 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு ரூ.1.15 கோடி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் தீபாவளியை முன்னிட்டு ஆடை விற்பனை நிறுவனங்களின் நேரடி விற்பனை கண்காட்சி திருப்பூர் அவிநாசிரோடு, திருமுருகன்பூண்டி அருகே பழக்கரை ஐ.கே.எப்.ஏ வளாகத்தில் நடைபெறுகிறது. 27, 28 ,29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
திருப்பூர், காங்கேயம் போலீஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் நள்ளிரவு 1.30 மணியளவில் கோவையில் இருந்து கரூர் நோக்கி சென்ற சரக்கு லாரியும், அதே போல மதுரையில் இருந்து திருச்சி சென்ற லாரியும் எதிர்பாரத மோதிக்கொண்டது. இதில் படுகாயமடைந்த லாரி டிரைவரை மீட்ட காங்கேயம் போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.