Tiruppur

News October 7, 2024

புதிய காவல் ஆணையர் அலுவலகம் திறப்பு

image

திருப்பூர், சிறுபூலுவபட்டியில் செயல்பட்டு வந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகம் குமார் நகர் பகுதியில் 2.24 ஏக்கர் பரப்பளவில் 5 மாடி கட்டடமாக கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதிய மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்தார். திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்தார்.

News October 7, 2024

திருப்பூரில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 541 மனுக்களை அளித்துள்ளனர்.

News October 7, 2024

BREAKING: பல்லடத்தில் வடமாநில வாலிபர் கொலை

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அருகே இன்று காலை வட மாநில வாலிபர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பல்லடம் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 7, 2024

அதிமுக பிரமுகர் மகன் மறைவுக்கு இபிஎஸ் அஞ்சலி

image

உடுமலை அதிமுக பிரமுகர் சிவராஜ் மகன் கோகுல்நாத் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் ஆறுதல் தெரிவிப்பதற்காக உடுமலை மின் நகரில் உள்ள கோகுல்நாத் இல்லத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்து திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் அதிமுகவை சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

News October 6, 2024

பல்லடத்தில் இலவச சட்ட பயிற்சி வகுப்பு

image

பல்லடம் ராயர்பாளையத்திலுள்ள விநாயகர் கோயில் மண்டபத்தில் மாற்றத்தை நோக்கி என்ற அமைப்பின் சார்பில் நாளை 06-10-2024 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 முதல் மாலை 05.00 வரை இலவச சட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.மேலும் இதில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் என பல்வேறு சட்டப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

News October 6, 2024

ஜவுளித்துறை செயலாளருடன் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு

image

திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் இந்திய அரசின் ஜவுளி துறை செயலாளர் ரஷ்னா ஷா கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டிருந்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தொழில்துறை சார்ந்த கோரிக்கைகளை செயலாளரிடம் வலியுறுத்தினானர்.

News October 5, 2024

உடுமலை அரசு இசை கல்லூரியில் மாணவர் சேர்க்கை

image

திருப்பூர், உடுமலையில் இந்த கல்வி ஆண்டு முதல் தளி ரோட்டில் உள்ள நகராட்சி பழைய கட்டிடத்தில் அரசு இசைப்பள்ளி தொடங்க உள்ளது. இந்த பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் என குரல் இசை நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்சி அளிக்கப்படுகிறது . வரும் 7ம் தேதி முதல் சேர்க்கை துவங்க உள்ளது என கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News October 5, 2024

திருப்பூரில் கல்வி கடன்: மிஸ் பண்ணிடாதீங்க!

image

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளி கல்வி கடனுக்காக விண்ணப்பிக்க மாவட்டத்தின் முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் வழங்கும் முகாம் வருகிற 9ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் அறையின் 20ல் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளோர் முன்கூட்டியே பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.

News October 4, 2024

திருப்பூரில் நைஜீரியன் அதிரடி கைது

image

திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் வர்த்தகம் மேற்கொள்வதற்காக வெளி மாநிலம் மற்றும் நாட்டினை சேர்ந்தவர்கள் ஏராளமானவர் வந்து செல்கின்றனர். இதில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் நான்சோ என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் காதர் பேட்டை பகுதிகள் நின்று கொண்டிருந்ததாக திருப்பூர் வடக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

News October 4, 2024

தாராபுரத்தில் குழந்தைக்கு பாலியல் தொல்லை

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (75). இவர் 3 வயது குழந்தையை பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து குழந்தையின் தாயார் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் மணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!