Tiruppur

News March 17, 2024

உடுமலை :30 ஆயிரம் மதிப்பிலான பொன்னாடைகள் பறிமுதல்

image

திருப்பூர், உடுமலையில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தணிக்கை குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடுமலை வழியாக வந்து கொண்டிருந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள்
இல்லாமல் கொண்டு வந்த
30 ஆயிரம் மதிப்புள்ள 158 பொன்னாடைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொன்னாடைகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறையில் வட்டாட்சியர் சுந்தரம் முன்னிலையில் வைக்கப்பட்டன.

News March 17, 2024

திருப்பூர்: எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

image

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து பல்லடம் எம்எல்ஏ அலுவலகத்தை தாசில்தார் ஜீவா தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று சீல் வைத்தனர்.

News March 17, 2024

 மூளை சாவடைந்தரின் உடல் உறுப்புகள் தானம்

image

நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், விவசாயி. இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

News March 17, 2024

திருப்பூர்: நாய்கள் கடித்து மான்கள் பலி

image

திருப்பூர் புதுப்பாளையம் ஊராட்சி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பிறந்து ஆறு மாதமே ஆன புள்ளிமான் ஒன்று பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது. அதேபோன்று அதே பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. விசாரணையில் தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு புள்ளி மான்களும் நேற்று உயிர் இழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

News March 17, 2024

கோழிகளை ஏற்றிச் சென்ற லாரி விபத்து

image

தாராபுரத்தில் இருந்து கோழிகள் மற்றும் வாத்துகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது காங்கேயம் பகுதியைச் சேர்ந்த ஞான பிரகாசம் என்பவர் மினி லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதி நேற்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஞானப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

News March 17, 2024

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

image

திருப்பூர், உடுமலை அனைத்து மகளிர் காவல் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களிடையே
குழந்தை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்ற கருத்து அடிப்படையில் தனியார் திருமண மண்டபத்தில் திறனறி போட்டிகள் இன்று நடைபெற்றன. இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். 

News March 16, 2024

துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவர்களிடமும் ஒப்படைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.