India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூரில் இல்லங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில், மழைநீர் சேகரிப்பு என்பது மாயமாகியிருக்கிறது. சிறிய மழைக்கே வெள்ளக்காடாக மாறுகிறது. திருப்பூர் நகர, ஊரக பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக மிகுந்த பாதிப்பு ஏற்படுகின்றது. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் அழகு சுந்தரம், இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் ஆசிரியருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆசிரியர் பள்ளியை விட்டு வெளியேறிய நிலையில் மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு அளித்ததால் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.
தீபாவளி திருநாளான இன்று அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் கிட்டத்தட்ட 15 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட திருப்பூர் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்!
தாராபுரம் அடுத்து உள்ள குள்ளாய் பாளையம் அருகே சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை பள்ளியில் இருந்து தீபாவளி விடுமுறைக்காக காரில் சொந்த ஊருக்கு அழைத்து சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் இருந்த மரத்தில் மோதிநின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை நீண்ட போராட்டத்திற்கு பின் கார் பள்ளத்திலிருந்து மீட்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இன்று மதியம் வரை செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்தது.
பல்லடம் தெற்கு பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவர் அரசு மகளிர் இலவச பேருந்தில் பயணம் செய்துள்ளார். இவருக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கும் முன்பே டிக்கெட் பரிசோதகர் பேருந்து ஏறி இவருக்கு ரூ200 அபராதம் விதித்தனர். இந்த விவகாரம் தொடர்பான செய்தி வெளியான நிலையில் போக்குவரத்து கழகத்தினர் அவரிடம் அபராதத்தை திருப்பிக் கொடுக்க முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி உள்ளது.
➤பல்லடத்தைச் சேர்ந்த பென் ஒருவர் பேருந்தில் மகளிர் இலவச பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததால், ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. ➤ திருப்பூரில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 23,82,820பேர் உள்ளனர். ➤திருப்பூரில் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். ➤ திருமூர்த்தி அணை பகுதியில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று வெளியிட்டார். இதில்1 1,68,197 ஆண் வாக்காளர்களும், 12,14,266 பெண் வாக்காளர்களும், 357 திருநங்கைகள் வாக்காளர்களும் என 23,82,820 வாக்காளர் உள்ளதாக ஆட்சியர் கிருஸ்துராஜ் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
Sorry, no posts matched your criteria.