India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சின்னக்கம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் இன்று சாலை விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த பயணிகள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மற்றொரு பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த ஏ பி முருகானந்தம் சட்டை அணியாமல் உள்பணியன் அணிந்தவாறு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தற்போதைய எம்பி சுப்பராயன் போட்டியிடுகிறார். அவர் இன்று (மார்ச் 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொங்கலூர் அருகே பெருந்தொழுவிலிருந்து சாலையில் கிராவல் மண் கடத்தப்படுவதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அனுமதியின்றி 4 யூனிட் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த கிராவல் மண் கடத்திய கோவிந்தராஜ் நாச்சிமுத்து மற்றும் செல்ல குட்டி ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தினர்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் தயாரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக திருப்பூர் ராஜாராம் வீதியில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான செல்வராஜ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
திருப்பூர் அடுத்து முத்தூர் ஈரோடு சாலை ரவுண்டானா அருகில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான காலி இடத்தில் மயானம் மற்றும் குப்பை கிடங்கு உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எறிய தொடங்கியது. இந்த தீ கோடை வெயில் உக்கிர தாக்கத்தினால் மளமளவென்று கொட்டிக் கிடந்த காய்ந்த குப்பைகள் முழுவதும் வேகமாக பரவி தீ விபத்து ஏற்பட்டது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, திருப்பூரில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாட்சி மக்களவை தொகுதி வேட்பாளராக கே. ஈஸ்வரசாமி அவர்களை திமுக அறிவித்தது. இந்தநிலையில், பொள்ளாட்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சு.முத்துச்சாமி, அர.சங்கரபாணி மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.கழல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக அருணாச்சலம் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டார் தேமுதிக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
Sorry, no posts matched your criteria.