Tiruppur

News October 24, 2024

திருப்பூர்: ஆர்ப்பரித்து பாயும் வெள்ளம்

image

திருப்பூர் மற்றும் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பூரில் பாயும் நொய்யல் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. நேற்று அணை மேடு பகுதியில் உள்ள தடுப்பணையில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது.

News October 24, 2024

முதியோர் இல்லங்களை பதிவு செய்ய கலெக்டர் உத்தரவு

image

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் வரும் நவ., 20ம் தேதிக் குள் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.முதியோர் இல்லங்கள் https://www. seniorcitizenhomes. tnsocialwelfare.tn.gov. / என்கிற தளத்திலும், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கான விடுதிகள், https://tnswp.com என்கிற தளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

புகையிலை விற்பனை செய்த 80 கடைகளுக்கு அபராதம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கண்டறியப்பட்ட 80 கடைகளும் பூட்டப்பட்டது. கடைகளுக்கு ரூ.21 லட்சத்து 25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார். புகையிலை பொருட்கள் விற்கப்பட்டால் 9444042322 என்ற வாட்சப் எண்ணில் புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தினார். 

News October 23, 2024

கியாஸ் நுகர்வோர் கூட்டம் 28-ம் தேதி நடக்கிறது

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு (கியாஸ்) நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வருகிற 28ம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் (அறை எண் 20ல்) நடக்கிறது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார். மேலும் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விரைவாக அனைத்து பணிகளையும் முடிக்கவும் உத்தரவிட்டார்.

News October 23, 2024

சாதி வன்கொடுமை புகார்: திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களில் அலுவலக பணி நேரத்தில் புகார்களை 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் பதிவு செய்யலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

திருப்பூரில் 572.50 மிமீமழை பதிவு

image

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பூர் மாவட்டத்தில் 572.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் அதிகபட்சமாக திருப்பூர் வடக்கு பகுதியில் 73 மில்லி மீட்டர், தெற்கு பகுதியில் 27 மில்லி மீட்டரும், உடுமலைப்பேட்டையில் 60 மில்லி மீட்டர் என மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

திருப்பூரில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மத்திய கிழக்கு வங்க கடல், அதையொட்டிய வடக்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2024

திருப்பூர் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

உடுமலை அருகே அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது.  இதனால் தற்போது அணை நீர்மட்டம் 85. 24 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பிரதான மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் கரையோர கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

News October 22, 2024

தமிழக அணியில் இடம்பெற்ற பள்ளி மாணவிக்கு பாராட்டு

image

உடுமலை அருகே பெதம்பம்பட்டி என் வி மெட்ரிக் பள்ளி மாணவி மிர்துளா மகாராஷ்டிராவில் நடைபெறும் ஜூனியர் பிரிவு மாணவிகளுக்கானகால்பந்து போட்டியில் விளையாடுவதற்கு தேனியில் நடைப்பெற்ற தேர்வு போட்டியில் வெற்றி பெற்றார். மாணவிக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கணேஷ் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!