Tiruppur

News October 30, 2024

அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவு

image

தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இன்று மதியம் வரை செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்தது.

News October 30, 2024

திருப்பூர்: விடியல் பயணத்தில் பெண்ணுக்கு அபராதம்

image

பல்லடம் தெற்கு பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவர் அரசு மகளிர் இலவச பேருந்தில் பயணம் செய்துள்ளார். இவருக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கும் முன்பே டிக்கெட் பரிசோதகர் பேருந்து ஏறி இவருக்கு ரூ200 அபராதம் விதித்தனர். இந்த விவகாரம் தொடர்பான செய்தி வெளியான நிலையில் போக்குவரத்து கழகத்தினர் அவரிடம் அபராதத்தை திருப்பிக் கொடுக்க முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி உள்ளது.

News October 29, 2024

திருப்பூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤பல்லடத்தைச் சேர்ந்த பென் ஒருவர் பேருந்தில் மகளிர் இலவச பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததால், ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. ➤ திருப்பூரில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 23,82,820பேர் உள்ளனர். ➤திருப்பூரில் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். ➤ திருமூர்த்தி அணை பகுதியில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

News October 29, 2024

திருப்பூரில் மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று வெளியிட்டார். இதில்1 1,68,197 ஆண் வாக்காளர்களும், 12,14,266 பெண் வாக்காளர்களும், 357 திருநங்கைகள் வாக்காளர்களும் என 23,82,820 வாக்காளர் உள்ளதாக ஆட்சியர் கிருஸ்துராஜ் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

News October 29, 2024

மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பாராட்டு

image

திருப்பூர், உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இறுதி ஆண்டு மெக்கானிக் மோட்டார் வாகனம் தொழிற்பிரிவில் மாணவர் இசாக் அகமது தொழிற்பயிற்சி படிப்புக்கான தேர்வில் மொத்தமாக 1200க்கு 1168 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் கணேசன் மாணவருக்கு சான்றிதழ் வழங்கினர். மேலும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

News October 29, 2024

பயிர்களுக்கு காப்பீடு செய்ய திருப்பூர் ஆட்சியர் அழைப்பு

image

திருப்பூர் மாவட்டம் பகுதியில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்திற்கு திருப்பூர் மாவட்டத்தில் 2024- 2025ஆம் ஆண்டு சிறப்பு பருவம் நெல் (2 ) மற்றும் ராகி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அல்லது வேளாண்மை அதிகாரிகள் மற்றும் உதவி வேளாண்மை அதிகாரிகளை அணுகலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 29, 2024

தேசிய அளவிலான ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற திருப்பூர் மாணவி

image

கர்நாடக மாநிலத்தில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில், 17 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், திருப்பூர், அம்மாபாளையத்தில் உள்ள ‘ஸ்மார்ட் மாடர்ன்’ பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவி அபர்ணா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மாணவியை பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், மாணவியை பாராட்டினர்.

News October 29, 2024

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் ரத்து

image

உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மறைமுக கொப்பரை ஏலம் நடைபெறும், இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை தீபாவளி என்பதால் அடுத்த வாரம் 7 -11- 24 அன்று கொப்பரை ஏலம் நடைபெறும் என ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். 

News October 28, 2024

தாராபுரம் அருகே சாலையில் வெடிப்பால் விபத்து அபாயம்

image

தாராபுரத்தில் இருந்து வெள்ளகோவில் செல்லும் சாலையில் சங்கரன்டாம்பாளையம் அருகே சாலையின் நடுவில் சுமார் 10 cm அளவில் 30 அடி நீளத்திற்கு வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அந்த வெடிப்பில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

News October 28, 2024

தீபாவளி ஷாப்பிங்: திக்குமுக்காடிய திருப்பூர்!

image

தீபாவளிக்கு புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் படையெடுத்ததால், நேற்று போக்குவரத்து நெரிசலில் திருப்பூர் திக்குமுக்காடியது. திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் உள்பட பல்வேறு தொழிலகங்கள், நேற்றுமுன்தினம் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கிவிட்டன. இதனால் பொதுமக்கள் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதி, புது மார்க்கெட் வீதி, குமரன் வீதியில் ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

error: Content is protected !!