Tiruppur

News March 22, 2025

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில் மார்ச் 24 முதல் ஏப்.13ஆம் தேதி வரை நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தகுதியானவர்கள் விண்ணப்பங்களை நேரடியாக அளிக்கலாம். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் மட்டுமே பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சி ஏப்.15இல் தொடங்கும்.

News March 22, 2025

திருப்பூரில் கருப்பு கொடி கட்டும் போராட்டம் தொடக்கம்

image

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மார்ச் 22இல் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்டம் முழுவதும் வீடுதோறும் கருப்புக்கொடி கட்டி போராட்டம் சற்றுமுன் தொடங்கியது. திருப்பூர் பாஜக மாவட்ட தலைவர் KCMB சீனிவாசன் அவர் இல்லத்தில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தை தொடங்கி வைத்தார். உடன் தொண்டர்கள் பலர் இருந்தனர்.

News March 22, 2025

மீண்டும் மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம் 

image

அனுப்புரம்பாளையம் பகுதியில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஜே பேரவை சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் போயம்பாளையத்தில் நேற்று காலை நடைபெற்றது. ஜே பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைவர் துணைச் செயலாளர் நித்தி ராஜன் வார்டு செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். அப்போது பேசுகையில், மீண்டும் ஆட்சி அமைத்தால் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கூறினர்.

News March 22, 2025

திருப்பூருக்கு கனமழை எச்சரிக்கை

image

தென்னிந்தியப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 22) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களே வெளியே செல்லும்போது குடையுடன் செல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News March 21, 2025

மாவட்ட காவல்துறையினரின் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில், இன்று 21.03.2025 இரவு, 9 மணி முதல் காலை 6 மணி வரை, பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின், அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, பல்லடம், அவினாசி, தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையினரின், இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல் துறையினரால், வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News March 21, 2025

வேலைவாய்ப்புடன் பயிற்சிக்கு அழைப்பு!

image

திருப்பூரில், பிரதமரின் இண்டன்ஷிப் திட்டத்தில், முன்னணி நிறுவனங்களில், ஊக்கத்தொகையுடன், கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 10ஆம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு, ஓராண்டு தொழில்பயிற்சி வழங்கி, நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க வரும் 30ஆம் தேதிக்குள் <>இந்த லிங்க்கில்<<>> பதிவு செய்யலாம்.

News March 21, 2025

திருப்பூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News March 21, 2025

திருப்பூரில் இன்று கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு, அறை எண் 120இல் கேஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெறும். இதில், மாவட்டத்தின் அனைத்து கேஸ் ஏஜென்சி உரிமையாளர்களும் பங்கேற்பர். எனவே, கேஸ் சம்பந்தமான புகார்கள் இருந்தால், பொதுமக்கள் எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்று தங்கள் குறைகளைச் சொல்லலாம். அது விரைவில் தீர்த்து வைக்கப்படும்.

News March 21, 2025

திருப்பூருக்கு ரூ.890 கோடி!

image

திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.890 கோடி மதிப்பீட்டில் ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்படும். முத்தூர்-காங்கேயம் குடிநீர்த் திட்டத்தில் குழாய்கள், மோட்டார்கள் உள்ளிட்டவை மறுசீரமைப்பு செய்யப்படும். மேலும், ரூ.2423 கோடியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் 3 ஆண்டில் நிறைவேற்றப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

News March 21, 2025

திருப்பூரில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

image

திருப்பூர் செரங்காடு பகுதி சேர்ந்தவர் பிரகாசம், பனியன் நிறுவன தொழிலாளி. இவர் 13 வயது சிறுமிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை  திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பிரகாசத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

error: Content is protected !!