India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படவுள்ளது. 45 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8வது முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க <
திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் நியமனம் செய்யப்பட உள்ளது . திருப்பூர் கலெக்டர் மணீஷ் எஸ். நர்னாவேர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது .
நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கக்கூடிய அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மற்றும் விடுதிகளுடன் கூடிய மதுபான கடைகள் செயல்பட தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 67 செவிலியர் பணியிடங்கள், மாவட்ட நலச்சங்கம் மூலம் நிரப்பப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 18.08.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும். <
▶️திருப்பூர் தெற்கு – 0421-2250192. ▶️திருப்பூர் வடக்கு – 0421-2200553. ▶️அவிநாசி – 04296-273237. ▶️பல்லடம் – 04255-253113. ▶️காங்கேயம் – 04257-230689. ▶️உடுமலை – 04252-223857. ▶️மடத்துக்குளம் – 04252-252588. ▶️ஊத்துக்குளி – 04294-260360. ▶️தாராபுரம் – 04258-220399. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
திருப்பூருக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள்.
▶பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்கால்களை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு.
▶நீராறு, நல்லாறு, அனைமலையாறு கனவுத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
▶மாணவர்கள், இளைஞர்களுக்காக ரூ.9 கோடியில் நவீன நூலகம்.
▶ரூ.5 கோடியில் பன்னோக்கு விளையாட்டு அரங்கம்.
▶அமராவதி கூட்டுறவு சக்கரை ஆலையை திறப்பது குறித்து வல்லுநர்குழு அமைக்கப்படும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள 16 உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர், கீழ் பிரிவு எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,000 முதல் ரூ.63,200, 1,12,400 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், <
திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Fashion Designer பயிற்சி வழங்கப்படவுள்ளது. 62 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கை எம்பிராய்டரி, ஜவுளி மற்றும் கைவினை துறையில் பணிபுரிய தேவையான அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 12ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
திருப்பூர், அய்யம்பாளையத்தில் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அய்யனை வழிபட்டால், தீராத நோய்களும், தோஷங்களும் நீங்குமாம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண், பாம்பு விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டதாம். அய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண்னை சிறிது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால்விஷ ஜந்துக்கள் அண்டாது என்பது நம்பிக்கையாக உள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
திருப்பூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து நாளை ஆக.11 மாலை 5.00 மணிக்குள் திருப்பூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் மற்றும் விபரங்களுக்கு <
Sorry, no posts matched your criteria.